SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: அடுத்த 10 ஆண்களில் அதிரடியாய் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்... கணக்கீடு இதோ

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் எவ்வளவு உயரும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? படிகளில் என்ன ஏற்றம் இருக்கும்? இந்த கேள்விகளுக்கான விடைகளைக் காணும் பணிகளிலும், ஊதிய உயர்வைக் கணக்கிடுவதிலும் ஊழியர்கள் அனைவரும் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 13, 2026, 01:19 PM IST | Updated: Nov 13, 2026, 01:24 PM IST
Image Credit: Representative / 8th Pay Commission Update
Join

8th Pay Commission: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தற்காலிகக் குழுவின் பரிந்துரைகளின் மீதுதான், நாட்டின் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளன. 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் எவ்வளவு உயரும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? படிகளில் என்ன ஏற்றம் இருக்கும்? இந்த கேள்விகளுக்கான விடைகளைக் காணும் பணிகளிலும், ஊதிய உயர்வைக் கணக்கிடுவதிலும் ஊழியர்கள் அனைவரும் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

சம்பள உயர்வுக்கான முக்கிய காரணிகள்

ஊதிய உயர்வு என்பது இரண்டு முக்கிய காரணிகளைச் சார்ந்தது:

முந்தைய ஊதியக் குழுக்களில் ஃபிட்மென்ட் ஃபாக்டர்கள்

NC-JCM, AIDEF, FNPO மற்றும் AINPSEF போன்ற முக்கிய ஊழியர் சங்கங்கள், 3.833 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கோருகின்றன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அடிப்படை ஊதியம் ₹18,000-லிருந்து ₹69,000-ஆக உயரும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: சம்பளம், ஓய்வூதியம், HRA, OPS, பதவி உயர்வு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய கோரிக்கைகள்

ஊதிய உயர்வு குறித்த பல்வேறு கோரிக்கைகள்:

நிலை 5, 6 மற்றும் 7 -இல் உள்ள ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் அடிப்படை ஊதியம்:

8வது ஊதியக் குழுவிற்கான ஒரு மதிப்பீட்டு கணக்கீட்டின் மூலம், பல்வேறு ஃபிட்மென்ட் ஃபாக்டர்கள் மற்றும் வருடாந்திர ஊதிய உயர்வுகளின் அடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகளில் ஊழியர்களுக்கான அடிப்படை ஊதிய அளவுகள் எப்படி இருக்கலாம் என்பதைப் பார்க்கலாம். இந்த மதிப்பீடு ஊதிய நிலைகள் (Pay Levels) 5, 6 மற்றும் 7-இல் உள்ள பணியாளர்களை உள்ளடக்கியது.

லெவல் 5 (Level-5): தற்போதைய அடிப்படை ஊதியம் ₹29,200

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் (fitment factor) மற்றும் 3% ஆண்டு ஊதிய உயர்வுடன், அடிப்படை ஊதியமானது ஓராண்டுக்குப் பிறகு ₹75,044-ஆகவும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹84,463-ஆகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ₹97,915-ஆகவும் உயரக்கூடும்.

2.1 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 7% ஆண்டு ஊதிய உயர்வுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் ₹1,12,734-ஐ எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 7% ஆண்டு ஊதிய உயர்வுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் ₹1,37,965-ஐ எட்டக்கூடும்.

லெவல் 6 (Level-6): தற்போதைய அடிப்படை ஊதியம் ₹35,400

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 3% ஆண்டு ஊதிய உயர்வுடன், அடிப்படை ஊதியமானது ஓராண்டுக்குப் பிறகு ₹90,978-ஆகவும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹1,02,397-ஆகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ₹1,18,706-ஆகவும் உயரக்கூடும்.

2.1 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 7% ஆண்டு ஊதிய உயர்வுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் ₹1,36,671-ஐ எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 7% ஆண்டு ஊதிய உயர்வுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் ₹1,67,259-ஐ எட்டக்கூடும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

லெவல் 7 (Level-7): தற்போதைய அடிப்படை ஊதியம் ₹44,900

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 3% ஆண்டு ஊதிய உயர்வுடன், அடிப்படை ஊதியமானது ஓராண்டுக்குப் பிறகு ₹1,15,393-ஆகவும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹1,29,876-ஆகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ₹1,50,562-ஆகவும் உயரக்கூடும்.

2.1 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 7% ஆண்டு ஊதிய உயர்வு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் ₹1,73,348-ஐ எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் 7% ஆண்டு ஊதிய உயர்வு எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் ₹2,12,145-ஐ அடையக்கூடும்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 8வது ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரே, உண்மையான ஃபிட்மென்ட் ஃபாக்டர், ஊதிய உயர்வு விகிதம் மற்றும் புதிய ஊதியக் கட்டமைப்பு ஆகியவை தெரியவரும். இந்த அறிக்கை 2027-ஆம் ஆண்டு மே–ஜூன் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மத்திய அரசு இது குறித்து முடிவெடுக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான நேரம்

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் கணிசமான அதிகரிப்பு இருக்கும் என்பது நிச்சயம். எனினும், அதன் சரியான அளவுகளை பற்றி துல்லியமாக தெரிந்துகொள்ள இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Explained: 8வது ஊதியக் குழு - லெவல் 6 மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் அரியர் தொகை!! கணக்கீடு என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES