8வது ஊதியக் குழு: லெவல் 1 முதல் 10 வரை.... அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா?
8th Pay Commission Salary Hike: சம்பள உயர்வில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய இடம் உள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்படக்கூடும் என கணிப்புகள் உள்ளன.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். தங்களின் ஊதியம், ஓய்வூதியம், அலவன்சுகள் ஆகியவற்றில் ஏற்படவுள்ள அதிகரிப்பை தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
இருப்பினும், ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் வெளியான பிறகுதான் துல்லியமான கணக்கீட்டைச் செய்ய முடியும். 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், எந்தவொரு குறிப்பிட்ட தொகையையும் இறுதியானதாகக் கருத முடியாது.
8வது ஊதியக் குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
சம்பள உயர்வில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய இடம் உள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்படக்கூடும் என கணிப்புகள் உள்ளன. எனினும், ஊழியர் சங்கங்கள் 3.0 முதல் 3.83 வரையிலான ஃபிட்மென்ட் ஃபாக்டரை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் கட்டமைப்பு
- மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் கட்டமைப்பு, 'பே மேட்ரிக்ஸ்' (pay matrix) முறையை அடிப்படையாகக் கொண்டது.
- இதில் நிலை 1 (Level 1) முதல் நிலை 18 (Level 18) வரையிலான நிலைகள் உள்ளன.
- ஒவ்வொரு நிலைக்கும் ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தற்போதுள்ள அடிப்படை ஊதியம்
| நிலை | அடிப்படை ஊதியம் |
| நிலை 1 | ₹18,000 |
| நிலை 2 | ₹19,900 |
| நிலை 5 | ₹29,200 |
| நிலை 6 | ₹35,400 |
| நிலை 7 | ₹44,900 |
| நிலை 10 | ₹56,100 |
8வது ஊதியக் குழு சம்பள உயர்வு
8வது ஊதியக் குழு அமலுக்கு வந்த பின் புதிய ஊதியம் எப்படி இருக்கும்? இதை சில உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்த கணக்கீடுகளுக்கு அதிகமாக ஊடகங்களில் பேசப்படும் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பயன்படுத்தலாம்.
| ஊழியர்களின் நிலை | தற்போதைய ஊதியம் | ஃபிட்மெண்ட் ஃபாக்டர் | புதிய ஊதியம் |
| நிலை 1 | ₹18,000 | 2.86 | ₹51,480 |
| நிலை 2 | ₹19,900 | 2.86 | ₹56,914 |
| நிலை 5 | ₹29,200 | 2.86 | ₹83,512 |
| நிலை 7 | ₹44,900 | 2.86 | ₹128,414 |
| நிலை 10 | ₹56,100 | 2.86 | ₹160,446 |
இந்தக் கணக்கீடு விளக்க நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2.86 என்பது அதிகாரப்பூர்வமான எண் அல்ல, மாறாக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு மட்டுமே என்பதை நினைவில் கொள்வது நல்லது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகமாக இருந்தால், புதிய ஊதியமும் அதிகமாக இருக்கும். அடிப்படை ஊதியம் மாறும்போது, அகவிலைப்படி (Dearness Allowance - DA) மற்றும் வீட்டு வாடகைப்படி (House Rent Allowance - HRA) ஆகியவையும் புதிய அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. அகவிலைப்படி 63 சதவீதமாகவும் (ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில்), வீட்டு வாடகைப்படி நகரத்தின் வகைப்பாட்டைப் பொறுத்து 30, 20 அல்லது 10 சதவீதமாகவும் இருக்கும். எனவே, மொத்த ஊதியத்தைக் கணக்கிடும்போது இந்தப்படிகளையும் சேர்த்துக்கொள்வது அவசியம்.
மொத்த ஊதியக் கணக்கீடு
நிலை 10-ஐ உதாரணமாகக் கொண்டு மொத்த ஊதியக் கணக்கீட்டைப் புரிந்துகொள்ளலாம்.
- புதிய அடிப்படை ஊதியம் ₹1,60,446 என்று வைத்துக்கொள்வோம்.
- இதில் 63 சதவீத அகவிலைப்படியைச் சேர்த்தால், சுமார் ₹1,01,081 கிடைக்கும்.
- ஆகையால், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் கூட்டுத்தொகை சுமார் ₹2,61,527 ஆகும்.
- இதனுடன், வீட்டு வாடகைப்படி மற்றும் பயணப்படி (Travel Allowance) ஆகியவை தனித்தனியாகச் சேர்க்கப்படும்.
உங்கள் புதிய ஊதியத்தை எவ்வாறு கணக்கிடுவது?
உங்கள் ஊதியத்தை மதிப்பிடுவதற்கு, முதலில் உங்கள் தற்போதைய அடிப்படை ஊதியத்தைப் பார்க்க வேண்டும். அதன் பிறகு, உங்கள் தற்போதைய அடிப்படை ஊதியத்தை உரிய ஃபிட்மெண்ட் ஃபாக்டருடன் பெருக்கி, புதிய அடிப்படை ஊதியத்தைக் கணக்கிடலாம். இதனைத் தொடர்ந்து, புதிய அடிப்படை ஊதியத்துடன் 63% அகவிலைப்படியையும் (DA) மற்றும் உங்கள் நகரம் அமைந்துள்ள வகைப்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் வீட்டு வாடகைப்படியையும் (HRA) சேர்த்து, உங்கள் மொத்த ஊதியத்தை மதிப்பிடலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடு, ஊழியர்கள் செயல்முறையை புரிந்துகொள்வதற்காக மட்டுமே செய்யப்படும் ஒரு மதிப்பீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை உங்கள் இறுதியான ஊதியமாகக் கருதக்கூடாது. உங்கள் உண்மையான ஊதியம் குறித்த துல்லியமான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.