8வது ஊதியக் குழு: மாத பென்ஷன் ரூ.68,234 ஆக உயருமா? குஷியில் ஓய்வூதியதாரர்கள்
8th Pay Commission: 8வது ஊதியக் குழு பற்றிய பேச்சு எழும்போதெல்லாம், சம்பள உயர்விலேயே அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. ஆனால், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் கணிசமான ஏற்றம் இருக்கும். கூடுதலாக, பல்வேறு ஓய்வூதியதாரர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படால், 8வது ஊதியக் குழு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டுள்ளனர். புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் சம்பளம், அலவன்சுகள், ஓய்வூதியம் ஆகிய அனைத்க்திலும் பெரிய அளவில் ஏற்றம் இருக்கும்.
8வது ஊதியக் குழு ஓய்வூதிய உயர்வு
8வது ஊதியக் குழு பற்றிய பேச்சு எழும்போதெல்லாம், சம்பள உயர்விலேயே அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. ஆனால், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் கணிசமான ஏற்றம் இருக்கும். கூடுதலாக, பல்வேறு ஓய்வூதியதாரர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படால், 8வது ஊதியக் குழு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
பரிந்துரை விதிமுறைகள்
2026 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்கள் 8-வது ஊதியக் குழுவின் பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஆல் இந்தியா டிஃபென்ஸ் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன்' (AIDEF) மற்றும் 'ரயில்வே மெயில் சர்வீஸ்' (RMS) போன்ற ஊழியர் சங்கங்கள், 8-வது ஊதியக் குழுவிற்கான பரிந்துரை விதிமுறைகளை (Terms of Reference) திருத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. 2026 ஜனவரி 1-க்கு முன் ஓய்வுபெறும் ஊழியர்களையும் இதன் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று இச்சங்கங்கள் வாதிடுகின்றன.
8-வது ஊதியக் குழுவின் அறிக்கை நடைமுறைக்கு வந்தவுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் தகுதியான ஊழியர்களும் பயனடைவார்கள். 2026 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் நிலை (Level) 1 முதல் 18 வரையிலான ஊழியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் திருத்தம் செய்யப்படும்.
இந்த பதிவில் குறிப்பாக, நிலை 5 முதல் 9 வரையிலான ஊழியர்களுக்குக் கிடைக்கக்கூடிய பலன்களின் அளவைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய உயர்வு
- ஓய்வூதியத் தொகையை ஊழியர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 67 சதவீதமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 50 சதவீதமாகவும் நிர்ணயிக்க வேண்டும் என்று 'கூட்டு ஆலோசனைக் குழுவின் தேசிய கவுன்சில்' (NC-JCM) கோரியுள்ளது.
- அதேபோல, 'ஆல் இந்தியா டிஃபென்ஸ் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன்' அமைப்பும் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 67 சதவீத ஓய்வூதியம் மற்றும் 50 சதவீத குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
- இவ்விரு அமைப்புகளும் ஒரே மாதிரியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
- இதற்கிடையில், 'பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ்' அமைப்பு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹45,000 வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
7வது ஊதியக் குழுவில் வந்த மாற்றம்
முன்னதாக, 7வது ஊதியக் குழு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹9,000-ஐ அங்கீகரித்ததுடன், அதிகபட்ச ஓய்வூதிய வரம்பை ₹1,25,000 ஆக நிர்ணயித்திருந்தது.
மேலும் படிக்க | இப்போதைய காலகட்டத்தில் எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்? முக்கிய தகவல்
குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
8வது ஊதியக் குழு ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) அளவை 2.1 ஆக நிர்ணயித்தால், குறைந்தபட்ச ஓய்வூதியம் பின்வருமாறு அமையும்:
- நிலை 5 ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹30,660,
- நிலை 6 ஊழியர்களுக்கு ₹37,170,
- நிலை 7 ஊழியர்களுக்கு ₹47,145,
- நிலை 8 ஊழியர்களுக்கு ₹49,980 மற்றும்
- நிலை 9 ஊழியர்களுக்கு ₹55,755 கிடைக்கும்.
8-வது ஊதியக் குழு 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) அளவை 2.28 ஆக நிர்ணயித்தால்:
- நிலை 5 ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹33,288
- நிலை 6 ஊழியர்களுக்கு ₹40,356,
- நிலை 7 ஊழியர்களுக்கு ₹51,186
- நிலை 8 ஊழியர்களுக்கு ₹54,264 மற்றும்
- நிலை 9 ஊழியர்களுக்கு ₹60,534 கிடைக்கும்.
8-வது ஊதியக் குழு 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) அளவை 2.28 ஆக நிர்ணயித்தால்:
- நிலை 6 ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹37,522 மற்றும்
- நிலை 9 ஊழியர்களுக்கு ₹68,234 கிடைக்கும்.
இதற்கிடையில், பல்வேறு ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை பற்றிய விவரம் இதோ:
| அமைப்பு | 8வது மத்திய ஊதியக் குழுவிற்கான (8th CPC) ஓய்வூதியப் பரிந்துரைகள் |
| கூட்டு ஆலோசனைக் கட்டமைப்பின் தேசியக் குழு (NC-JCM) | ஓய்வூதியம் என்பது இறுதியாகப் பெற்ற ஊதியத்தில் 67%-ஆகவும், குடும்ப ஓய்வூதியம் 50%-ஆகவும் இருக்க வேண்டும். |
| அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு (AIDEF) | ஓய்வூதியம் என்பது இறுதியாகப் பெற்ற ஊதியத்தில் 67%-ஆகவும், குடும்ப ஓய்வூதியம் 50%-ஆகவும் இருக்க வேண்டும். |
| தேசிய அஞ்சல் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FNPO) | துறைசார் பட்ஜெட்டிலிருந்து முழுமையாகப் பிரித்தல்; இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியின் (Consolidated Fund of India) கீழ் மையப்படுத்துதல். |
| அகில இந்திய புதிய ஓய்வூதியத் திட்ட ஊழியர்கள் கூட்டமைப்பு (AINPSEF) | குடிமைப் பணி ஊழியர்களுக்கும் 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' (OROP) திட்டம். |
| இந்திய ரயில்வே மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) | அனைத்து ஓய்வூதியத் திட்டங்களின் கீழும் ஓய்வு மற்றும் இறப்புக்கான பணிக்கொடை (Gratuity) மற்றும் OROP திட்டம். |
| பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ் (BPS) | குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 45,000; இறுதியாகப் பெற்ற ஊதியத்தில் 67% ஓய்வூதியம்; இறுதியாகப் பெற்ற ஊதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியம். |
இவை அனைத்தும் நிறைவேறினால், 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிதி நன்மைகளை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.