அடல் பென்ஷன் திட்டம்: மாதம் வெறும் ரூ.210 டெபாசிட் செய்து ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?
Atal Pension Scheme: ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதத் தொகையைப் பெற விரும்பும் நபர்களுக்கு, 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) எனப்படும் அடல் ஓய்வுதியத் திட்டம் சிறந்த தேர்வாக அமையலாம்.
Atal Pension Scheme: பணத்திற்கான தேவை எப்பொதும் இருக்கிறது. முதுமையயில் இந்த தேவை அதிகரிக்கிறது. ஆனால் அக்காலத்தில் வழக்கமான வருமான ஆதாரங்கள் பெரும்பாலும் குறைந்துவிடுகின்றன. இதனால்தான், மக்கள் தாங்கள் பணியில் இருக்கும்போதே அல்லது வருமானம் ஈட்டும்போதே எதிர்காலத்திற்கான சேமிப்பு மற்றும் முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்குகிறார்கள்.
அடல் ஓய்வூதியத் திட்டம்
ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதத் தொகையைப் பெற விரும்பும் நபர்களுக்கு, 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) எனப்படும் அடல் ஓய்வுதியத் திட்டம் சிறந்த தேர்வாக அமையலாம். இது மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் மாதந்தோறும் வெறும் ₹210 முதலீடு செய்து 60 வயதை அடைந்த பிறகு மாதம் ₹5,000 வரை ஓய்வூதியத்தைப் பெற முடியும். இத்திட்டத்தைப் பற்றிய முழுமையாக தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
அடல் பென்ஷன் யோஜனாவில் யாரெல்லாம் சேர முடியும்?
இதற்கான தகுதி நிபந்தனைகள் பின்வருமாறு:
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
- நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது.
- இத்திட்டத்தில் சேரச் செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு அவசியம்.
60 வயதுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
அடல் பென்ஷன் யோஜனா ₹1,000 முதல் ₹5,000 வரையிலான மாத ஓய்வூதியத் திட்டங்களை வழங்குகிறது. 60 வயதுக்குப் பிறகு கிடைக்கும் மாத ஓய்வூதியம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட திட்டத்தைப் பொறுத்தது. ஆகையால், இத்திட்டத்தில் சேரும்போது உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஓய்வூதியத் தேர்வை மேற்கொள்வது முக்கியம்.
₹210 முதலீட்டுத் திட்டம்
அடல் பென்ஷன் திட்டத்திற்கான பங்களிப்புத் தொகை நபருக்கு நபர் மாறுபடும். பிரீமியம் (பங்களிப்பு) தொகை உங்கள் வயது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
உதாரணமாக, ஒருவருக்கு 18 வயதாக இருந்து, அவர் மாதம் ₹5,000 ஓய்வூதியத்தைத் தேர்வு செய்தால், அவர் மாதந்தோறும் ₹210 பிரீமியம் செலுத்த வேண்டும்.
ஒருவருக்கு 30 வயதாக இருந்து, அவர் ₹5,000 ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்தால், அவர் மாதந்தோறும் ₹577 பிரீமியம் செலுத்த வேண்டும்.
குறிப்பு: 60 வயதுக்குப் பிறகு அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் மாத ஓய்வூதியப் பலனைப் பெற, நீங்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | மாத சம்பளம் ரூ.20,000: EPF மற்றும் EPS கணக்குகளில் எவ்வளவு பங்களிப்பு இருக்கும்?
அடல் பென்ஷன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
- 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வங்கி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
- இதற்கு முதலில், நீங்கள் உங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டும்.
- வங்கி உங்கள் KYC (வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு) நடைமுறையை நிறைவு செய்யும்.
- அடுத்ததாக, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் அடிப்படையில், அதற்கான பிரீமியம் (பங்களிப்புத் தொகை) குறித்த விவரங்களை வங்கி வழங்கும்.
- இறுதியாக, உங்கள் வங்கிக் கணக்கு இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டு, நீங்கள் ஒரு பயனாளியாக இதில் பதிவு செய்யப்படுவீர்கள்.