SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அதிகரிக்கும் அகவிலைப்படி: அரசு ஊழியர்களுக்கு AICPI-IW குட் நியூஸ்.. டிஏ, சம்பளம் எவ்வளவு உயரும்?

DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஜனவரி 2027-க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான கணக்கீடு தொடங்கிவிட்டது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 01, 2026, 03:49 PM IST | Updated: Oct 01, 2026, 04:00 PM IST
Join

DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஜனவரி 2027-க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான கணக்கீடு தொடங்கிவிட்டது. தொழிலாளர் நலத்துறை நேற்று (புதன்கிழமை, செப்டம்பர் 30, 2026) சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறித்த தகவலை வெளியிட்டது.

AICPI-IW தரவுகள்

அகில இந்தியத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) ஜூலை மாதத்தில் 153.2 புள்ளிகளாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 1.2 புள்ளிகள் அதிகரித்து 154.4 புள்ளிகளை எட்டியது. ஆகஸ்ட் 2026-க்கான இக்குறியீடு 154.4 புள்ளிகளை எட்டியதை தொழிலாளர் நலத்துறையின் தலைமை இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார். பணவீக்க விகிதமும் முந்தைய மாதத்தில் இருந்த 4.57 சதவீதத்திலிருந்து இந்த மாதம் 4.96 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

AICPI-IW குறியீடு மற்றும் பணவீக்க விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து 12 மாத சராசரி குறியீடு 149.82-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கணக்கிடப்படும் அகவிலைப்படி (DA) விகிதம் 65.05 சதவீதமாக அமையும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு அகவிலைப்படியை முழு எண்களிலேயே கணக்கிடுகிறது. ஆகையால் இந்த 65.05 சதவீத அகவிலைப்படி 65 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது. AICPI-IW தரவை தொழிலாளர் நலத்துறை ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது. நாடு முழுவதும் உள்ள 88 முக்கியத் தொழில் மையங்களில் உள்ள 317 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளைப் பயன்படுத்தி இந்தக் குறியீடு கணக்கிடப்படுகின்றது.

செப்டம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான AICPI-IW குறியீட்டு மதிப்புகள்:

மாதம்AICPI-IW குறியீடு
செப்டம்பர்-25147.3
அக்டோபர்-25147.7
நவம்பர்-25148.2
டிசம்பர்-25148.2
ஜனவரி-26148.6
பிப்ரவரி-26148.5
மார்ச்-26149.1
ஏப்ரல்-26149.9
மே-26150.8
ஜூன்-26151.9
ஜூலை-26153.2
ஆகஸ்ட்-26154.4
சராசரி149.8

மதிப்பிடப்பட்ட DA: 65.05%

மேலும் படிக்க | உலகளவில் சரிந்தாலும் இந்தியாவில் தங்கம் விலை குறையாதது ஏன்? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்!

அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி அகவிலைப்படியைக் கணக்கிடுகின்றனர்:

DA% = [{AICPI-IW-ன் 12 மாத சராசரி (அடிப்படை ஆண்டு 2001) - 261.42} / 261.42 x 100]

முதலில், 2001-ஆம் ஆண்டின் அடிப்படை மதிப்பை 2.88-ஆல் பெருக்கி, அதனுடன் 2016-ஆம் ஆண்டின் அடிப்படை மதிப்பைச் சேர்க்க வேண்டும். சமீபத்திய அடிப்படை ஆண்டை (2016) 2001-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுச் சமன் செய்ய, நிபுணர்கள் 2.88 என்ற இணைப்பு காரணியைக் (linking factor) கணக்கிடுகின்றனர்.

ஆகஸ்ட் 2020-ல், பழைய அடிப்படை ஆண்டின் (2001=100) கீழ் CPI-IW மதிப்பு 33.8 ஆகவும், புதிய அடிப்படை ஆண்டின் (2016=100) கீழ் 117.4 ஆகவும் இருந்ததாகத் தொழிலாளர் நல அலுவலகத்தின் (Labour Bureau) தரவுகள் காட்டுகின்றன. ஆகையால், இந்தக் காரணி பின்வருமாறு கணக்கிடப்படுகின்றது:

338 ÷ 117.4 = 2.88.

மேலும் படிக்க | UPI MDR முதல் FD வரை: அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் 5 முக்கிய நிதிசார் மாற்றங்கள்

ஜூலை மாத டிஏ உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) அரசு ஆண்டுக்கு இருமுறை திருத்தி அமைக்கிறது. டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் பெறப்படும் AICPI-IW தரவுகளின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. பொதுவாக, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அரசு ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதற்குப் பதிலாக, பண்டிகைக் காலங்களில் வெளியிடுகிறது. அதாவது ஜனவரி மாத அலவிலைப்படியின் அறிவிப்பு மார்ச் மாதத்திலும், ஜூலை மாத அகவிலைப்படியின் அறிவிப்பு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் வெளியிடப்படுகின்றது.

ஜூன் 2026-க்கான அகவிலைப்படி உயர்வு (DA Hike) குறித்த அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் இது 63 சதவீதமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

டிஏ உயர்வுக்குப் பிறகு அகவிலைப்படியின் அளவு எவ்வளவு இருக்கும்?

அகவிலைப்படி (DA) 63% ஆக உயர்ந்தால்,

குறிப்பு: தற்போதைய நிலையில் இந்த எண்கள் வெறும் மதிப்பீடுகள் மட்டுமே. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகே இதில் தெளிவு கிடைக்கும் என்பதை நொனைவில் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க | சிறுசேமிப்புத் திட்டங்கள்: 3ஆம் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டன... மாற்றம் உண்டா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES