• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explainer: அடிப்படைச் சம்பளம், மொத்த ஊதியம், CTC.... பணிக்கொடை எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?

Explainer: அடிப்படைச் சம்பளம், மொத்த ஊதியம், CTC.... பணிக்கொடை எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?

Gratuity Calculation: கிராச்சுவிட்டி எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது? மொத்த சம்பளத்திலா (CTC)? மொத்த ஊதியத்திலா (Gross Salary) அல்லது அடிப்படைச் சம்பளத்திலா (Basic Salary)? இது குறித்து ஊழியர்களிடையே பெரும்பாலும் குழப்பம் நிலவுகிறது.

Written BySripriya Sambathkumar
Published: Aug 26, 2026, 01:47 PM IST|Updated: Aug 26, 2026, 01:56 PM IST
joinshare
Explainer: அடிப்படைச் சம்பளம், மொத்த ஊதியம், CTC.... பணிக்கொடை எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
Image Credit: Gratuity Calculation (Representative Photo)

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

2

திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

3

மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

4

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

5

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Gratuity Calculation: நம் நாட்டில் வழங்கப்படும் முதன்மையான ஊழியர் நலத் திட்டங்களில் பணிக்கொடையும் முக்கியமான ஒன்றாகும். ஒரு ஊழியரின் தொடர் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இந்த தொகை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, சம்பளத்திற்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நிதி நன்மையாக 'கிராச்சுவிட்டி' (Gratuity) எனப்படும் பணிக்கொடை கருதப்படுகிறது.

பணிக்கொடை என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக தனது பொன்னான நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணிக்கிறார். ​​அதற்கான அங்கீகாரமாக அந்நிறுவனம் அவருக்கு ஒரு கணிசமான தொகையை ஒரே தவணையாக வழங்குகிறது. இதுவே கிராச்சுவிட்டி அல்லது பணிக்கொடை என்று அழைக்கப்படுகிறது.

கிராஜுவிட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?

கிராச்சுவிட்டி எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது? மொத்த சம்பளத்திலா (CTC)? மொத்த ஊதியத்திலா (Gross Salary) அல்லது அடிப்படைச் சம்பளத்திலா (Basic Salary)? இது குறித்து ஊழியர்களிடையே பெரும்பாலும் குழப்பம் நிலவுகிறது.

இது குறித்து உங்களுக்கும் சந்தேகம் இருந்தால், புதிய தொழிலாளர் சட்ட விதிகளின் கீழ் கிராச்சுவிட்டி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதையும், அதை வீட்டிலிருந்தபடியே எவ்வாறு கணக்கிடலாம் என்பதையும் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

அடிப்படைச் சம்பளம், மொத்த ஊதியம், CTC: எது அடிப்படையாக அமைகிறது?

  • முதலாவதாக, கிராச்சுவிட்டி என்பது உங்கள் மொத்த ஊதியத்தையோ (Gross Salary) அல்லது CTC-யையோ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதில்லை என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். 
  • ஊழியரின் 'அடிப்படைச் சம்பளம்' (Basic Salary) மற்றும் 'அகவிலைப்படி' (Dearness Allowance - DA) ஆகியவையே கிராச்சுவிட்டி கணக்கீட்டிற்கான ஒரே அடிப்படையாகும்.
  • உங்கள் சம்பளப் பட்டியலில் உள்ள HRA (வீட்டு வாடகைப்படி), போனஸ், பயணப்படி (Travel Allowance) அல்லது போக்குவரத்துப்படி (Conveyance Allowance) போன்ற பிற படிகள் கிராச்சுவிட்டி கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. 
  • ஆதாவது, உங்கள் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு உங்கள் கிராச்சுவிட்டி தொகையும் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | பெங்களூருவில் 8வது ஊதியக் குழுவின் அடுத்த கட்ட கூட்டம்: தேதி என்ன? பதிவு செய்வது எப்படி?

கிராச்சுவிட்டி தகுதி: யாருக்கு, எப்போது இந்தப் பலன் கிடைக்கும்?

'கிராச்சுவிட்டி செலுத்துதல் சட்டம், 1972' (Payment of Gratuity Act, 1972) மற்றும் புதிய தொழிலாளர் விதிமுறைகளின் கீழ், கிராச்சுவிட்டி பெற ஒருவர் ஒரே நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்க வேண்டும். இருப்பினும், ஊழியரின் இறப்பு அல்லது விபத்து காரணமாக ஏற்படும் நிரந்தர ஊனம் ஆகியவற்றின் போது இந்த ஐந்து ஆண்டு நிபந்தனை தளர்த்தப்படுகிறது.

கிராச்சுவிட்டியை கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?

ஓரு நிறுவனம் 'கிராச்சுவிட்டி செலுத்துதல் சட்டத்தின்' கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கிராச்சுவிட்டியைத் தீர்மானிக்க பின்வரும் அதிகாரப்பூர்வ சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது:

கிராச்சுவிட்டி = (அடிப்படைச் சம்பளம் + DA) × 15 × பணிபுரிந்த ஆண்டுகள் / 26

இதில்,

  • 15 என்பது ஆண்டின் 15 நாட்களுக்கான சம்பளத்தைக் (பணி மதிப்பு) குறிக்கிறது. 
  • '26' என்பது ஒரு மாதத்தில் உள்ள சராசரி வேலை நாட்களைக் (ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருந்தாலும், 4 ஞாயிற்றுக்கிழமைகள் கழிக்கப்பட்டு, 26 வேலை நாட்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன) குறிக்கிறது.

கிராச்சுவிட்டி (Gratuity) கணக்கீடு மற்றும் முக்கிய விதிகள்

அம்சம்விவரம்
தகுதி5 ஆண்டுகள் கட்டாயத் தொடர் பணி
பொருந்தும் தன்மை10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள்
ஊதிய வரையறைகடைசி அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி (DA)
கணக்கீட்டு சூத்திரம்(15 × கடைசி ஊதியம் × மொத்த ஆண்டுகள்) ÷ 26
₹20,000 ஊதியத்திற்கான பணிக்கொடை (5 ஆண்டுகள்)₹57,692.30
ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கான விதி6 மாதங்களுக்கு மேற்பட்ட பணிக்காலம் ஒரு முழு ஆண்டாகக் கருதப்படும்.
கோரிக்கை சமர்ப்பிக்கும் காலம்பணியிலிருந்து விலகிய 30 நாட்களுக்குள் (படிவம் I மூலம்)

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் HRA எவ்வளவு அதிகரிக்கும்?

கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும்?

சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்:

உதாரணம் 1:

ஓரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவற்றின் கூட்டுத்தொகை ₹20,000 ஆக இருந்து அவர் தனது அலுவலகத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் என வைத்துக்கொள்வோம். அவரது கிராஜுவிட்யி பின்வரும் வழிகளில் கனக்கிடப்பப்டும்:

கிராஜுவிட்டி = (20,000 × 15 × 7) / 26 = ₹80,769 (தோராயமாக)

அதாவது, 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனம் அவருக்குத் தோராயமாக ₹80,000 பணிக்கொடையை (Gratuity) வழங்கும்.

ஊதாரணம் 2:

₹20,000 சம்பளம் பெறும் ஊழியர் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணிக்கொடை (Gratuity) பின்வருமாறு கணக்கிடப்படும்:

கிராஜுவிட்டி = (15 × 20,000 × 5) ÷ 26 = ₹57,692.30

அதாவது, இந்த உதாரணத்தின்படி, அந்த ஊழியர் மொத்தம் ₹57,692.30 அளவிலான பணிக்கொடையைப் பெறுவார்.

'6 மாத விதி' என்றால் என்ன?

பணிக்கொடைக்கான ஆண்டுகளைக் கணக்கிடும்போது '6 மாத விதி' முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் 6 மாதங்களுக்கு மேல் பணிபுரிந்திருந்தால், அது ஓரு முழு ஆண்டாகக் கருதப்படும்.

உதாரணமாக,

  • 7 ஆண்டுகள் மற்றும் 7 மாதப் பணி = 8 ஆண்டுகளாகக் கணக்கிடப்படும்.
  • 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதப் பணி = 7 ஆண்டுகளாக மட்டுமே கணக்கிடப்படும்.
  • 11 மாதப் பணி = முழு ஆண்டாகக் கணக்கிடப்படும், இதனால் நீங்கள் பணிக்கொடை பெறத் தகுதி பெறுவீர்கள்.

ஊழியர்களுக்கான முக்கிய தகவல்

பணிக்கொடை என்பது உங்கள் எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பான நிதியாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். நீங்கள் பணி ஓய்வு பெற்றாலும் அல்லது வேலையை மாற்றினாலும், உங்கள் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும் என்பதை மேலுள்ள சூத்திரத்தை பயன்படுத்தி நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Explained : உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற கார் எது? யார் எந்த காரை வாங்கலாம்? முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Personal Finance