• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /நவம்பர் மாதம்: வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை.. முழு லிஸ்ட் இதோ!

நவம்பர் மாதம்: வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை.. முழு லிஸ்ட் இதோ!

November Bank Holidays: நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நவம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்த பட்டியலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 01, 2026, 02:06 PM IST|Updated: Nov 01, 2026, 02:31 PM IST
joinshare
நவம்பர் மாதம்: வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை.. முழு லிஸ்ட் இதோ!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
NTA Recruitment: தேசிய தேர்வு முகமையில் வேலை - சம்பளம், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விவரம் இதோ

NTA Recruitment: தேசிய தேர்வு முகமையில் வேலை - சம்பளம், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விவரம் இதோ

2

Explainer: அரசு ஊழியர்களுக்கு இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய திருத்தமா? 8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்

3

நவபஞ்சம யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை கொட்டும்! ஜாக்பாட் அடிக்கும்

4

புதிய வீடு கட்டுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்! புதிய விதிமுறைகள் இதோ

5

தமிழகத்தில் வீடு கட்டப் போகிறீர்களா? அரசு வெளியிட்ட சிமெண்ட், செங்கல், கம்பி விலை, ஆள் கூலி முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

November Bank Holidays: நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. வங்கிகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். ஆர்பிஐ நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதத்திலும் வங்கிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

நவம்பரில் 15 நாட்கள் வங்கிளுக்கு விடுமுறை

நவம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில் தீபாவளி, குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபடும்.

ஒரு மாநிலத்தில் வங்கிகள் மூடப்படிருப்பதும், நாட்டின் பிற மாநிலங்களில் வங்கிகள் செயல்படும். எனவே, எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து பார்ப்போம்.அதன்படி, நவம்பர் 1, 8,15,22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.  நாடு முழுவதும் இரண்டாவது சனிக்கிழமை நவம்பர் 14ஆம் தேதி, நவம்பர் 28ஆம் தேதி  நான்காவது சனிக்கிழமை வங்கிளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, ஆயுள் சான்றிதழ், GST.... முழு லிஸ்ட் இதோ

மாநில வாரியாக பார்க்கையில்,  நவம்பர் 9,10,11,13,16,20,23,24,27ஆம் தேதிகளில் பண்டிகை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, லக்ஷ்மி பூஜை, கோவர்தன் பூஜை, வாங்கலா திருவிழா, சத் பூஜை, இகாஸ்-பக்வால், செங் குட் ஸ்நேம், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா மற்றும் கனகதாச ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் மற்றும் பிராந்திய நிகழ்வுகளுக்கு இந்த விடுமுறைகள் கடைபிடிக்கப்படும்.

மாநில வாரியாக வங்கிகளுக்கு எப்போது விடுமுறை?

நாட்கள்பண்டிகை நாட்கள்எந்த மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
நவம்பர் 01புதுச்சேரி விடுதலை நாள்/ஹரியான தினம்/ கன்னட ராஜ்யோத்சவா
 
புதுச்சேரி, மணிப்பூர், ஹரியானா, கர்நாடகா
 
நவம்பர் 02நோங்க்ரெம் நடனம்
 
மேகாலயா
 
நவம்பர் 09லக்ஷமி பூஜை/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/கோவர்தன் பூஜை
 
திரிபுரா, மத்திய பிரதேசம், சண்டிகர், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம்
 
நவம்பர் 10தீபாவளி/கோவர்தன் பூஜை/லக்ஷமி பூஜை/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்
 
குஜராத், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம்
 
நவம்பர் 11லக்மி பூஜை/நிங்கோல் சக்கௌபா/பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி
 
சிக்கிம், மணிப்பூர், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம்
 
நவம்பர் 13வங்கால திருவிழா
 
மேகாலயா
நவம்பர் 16சத் பூஜை/சூரிய ஷஷ்டி தல சத்
 
பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
 
நவம்பர் 20இகாஸ் - பக்வால்
 
உத்தரகாண்ட்
 
நவம்பர் 23செங் குட் ஸ்னெம்
 
மேகாலயா
 
நவம்பர் 24குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா
 
மிசோரம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், சண்டிகர், உத்தரகாண்ட், தெலங்கானா, டெல்லி, சத்தீஸ்கர்
 
நவம்பர் 27கனகதாச ஜெயந்தி
 
கர்நாடகா
 

தமிழகத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் மொத்தம் பண்டிகை நாட்கள், வார  இறுதி நாட்களுடன் சேர்த்து 7 நாட்கள் வங்கிளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 1 (ஞாயிறு), நவம்பர் 8 (தீபாவளி), நவம்பர் 15 (ஞாயிறு), நவம்பர் 22 (ஞாயிறு), நவம்பர் 29 (ஞாயிறு), நவம்பர் 14 (சனிக்கிழமை), நவம்பர் 28 (4வது சனிக்கிழமை) என 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சேவைகள் தொடர்ந்து இயங்கும்

விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தாலும், இணை வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, யுபிஐ, நெட் பேக்கிங் போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகள்  வழக்கம்போல் செயல்படும். இருப்பினும், ரொக்க டெபாசிட், காசோலை பரிவர்த்தனைகள் அல்லது வங்கிக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: தங்கம் விலை இன்னும் குறையும்.. எவ்வளவு தெரியுமா? ஆனந்த் சீனிவாசன் கணிப்பு!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bank Holiday