• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /டாஸ்மாக் வருமானத்தில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டுங்கள்: விஜய் அரசை சாடிய EPS!

டாஸ்மாக் வருமானத்தில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டுங்கள்: விஜய் அரசை சாடிய EPS!

அம்மா மருந்தகங்களை மீண்டும் திறந்து மலிவு விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மதுபான விலை உயர்வு மூலம் வருவாய் ஈட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அரசு காட்ட வேண்டும் என அவர் விமர்சித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Nov 01, 2026, 02:46 PM IST|Updated: Nov 01, 2026, 02:50 PM IST
joinshare
டாஸ்மாக் வருமானத்தில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டுங்கள்: விஜய் அரசை சாடிய EPS!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
செஞ்சி ஹேமாவதி... காக்கிநாடாவின் ஞானேஸ்வரி... மாயமான 2 சிறுமிகளும்; தொடரும் மர்மங்களும் Explained

செஞ்சி ஹேமாவதி... காக்கிநாடாவின் ஞானேஸ்வரி... மாயமான 2 சிறுமிகளும்; தொடரும் மர்மங்களும் Explained

2

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

3

தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் ஜாக்பாட்: 20% மானியத்துடன் கடனுதவி

4

டாஸ்மாக் வருமானத்தில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டுங்கள்: விஜய் அரசை சாடிய EPS!

5

நவம்பர் மாதம்: வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை.. முழு லிஸ்ட் இதோ!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில், கடந்த 2014ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்களால் கூட்டுறவுத் துறை மூலம் 'அம்மா மருந்தகங்கள்' தொடங்கப்பட்டன. தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி மக்களின் உயிரைக் காத்து வந்தது.

ஆனால், கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இத்திட்டத்திற்கு 'முதல்வர் மருந்தகம்' எனப் பெயர் மாற்றம் செய்து, தனியாருக்குத் தாரை வார்த்து அம்மா மருந்தகங்களை முடக்கியது. தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திரு. ஜோசப் விஜய்யின் த.வெ.க. அரசும் இந்த மருந்தகங்களை முற்றிலுமாகக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுள்ளது" என்று சாடியுள்ளார்.

சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உயிர் காக்கும் மருந்துகளின் விலையை, நிர்ணயிக்கப்பட்ட 30 சதவீத லாப வரம்பையும் தாண்டி பலமடங்கு உயர்த்தி விற்று லாபம் சம்பாதிப்பதாக ' All India Drug Action Network ' அமைப்பு தெரிவித்துள்ளதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள் மற்றும் மருந்து விலை நிர்ணயம் குறித்த வழக்கு கடந்த அக்டோபர் 27, 2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் தங்களின் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என நீதியரசர் உத்தரவிட்டுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை 10 ரூபாய் உயர்த்தி, அதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1,200 கோடி முதல் ரூ. 1,600 கோடி வரை கூடுதல் வருமானம் வருவதாகப் பெருமை பேசும் இந்த விஜய் அரசு, மக்களின் மருத்துவத் தேவையை அலட்சியப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.  

"மது விற்பனையின் மூலம் வருமானம் ஈட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, மக்களின் நோய்ப் பிணியைத் தீர்ப்பதில் இந்த அரசு காட்டுமா? ஏழை எளிய மக்களின் நலன் கருதி, குறைந்த விலையில் மருந்துகளை வழங்கிய ‘அம்மா மருந்தகங்களை’ மீண்டும் முழுமையாகத் திறந்து, மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து மக்களின் உயிரைக் காக்க இந்த அரசு முன்வருமா?" என்றும் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu