• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /மாதம் வெறும் ரூ.199! பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழிகாட்ட புதிய AI டூல் - Kwala Intel Pro!

மாதம் வெறும் ரூ.199! பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழிகாட்ட புதிய AI டூல் - Kwala Intel Pro!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்காக AI அடிப்படையிலான ஆய்வு வசதிகளை வழங்கும் Kwala Intel Pro தளத்தின் சிறப்பம்சங்கள், பயன்பாடுகள் மற்றும் சந்தா கட்டணம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Oct 15, 2026, 19:46 IST|Updated: Oct 15, 2026, 19:48 IST
joinshare
மாதம் வெறும் ரூ.199! பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழிகாட்ட புதிய AI டூல் - Kwala Intel Pro!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

2

புதன் பெயர்ச்சி: டிசம்பர் 2 முதல் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பதவி உயர்வு, பணவரவு!

3

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

4

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

5

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சமீப காலமாக AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைத்த துறைகளிலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பங்குச்சந்தை வர்த்தகத்திலும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சந்தை தரவுகளை ஆய்வு செய்வது, பங்குகளின் விலை மாற்றங்களை பகுப்பாய்வு செய்வது, முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கான தகவல்களை பெறுவது எனப் பல்வேறு பணிகளில் AI கருவிகள் உதவுகின்றன. அந்த வகையில், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக AI அடிப்படையிலான சந்தை ஆய்வு வசதிகளை வழங்குகிறது Kwala Intel Pro தளம்.

பங்குசந்தையில் ஏன் AI முக்கியத்துவம் பெறுகிறது?

பங்குச்சந்தையில் விலைகள், வர்த்தக அளவு, சந்தை ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்டவை குறுகிய நேரத்திலேயே மாறக்கூடும். குறிப்பாக, எதிர்கால மற்றும் விருப்ப ஒப்பந்தங்கள் பிரிவில் விரைவான முடிவுகள் முக்கியமானவை. இத்தகைய சூழலில், அதிக அளவிலான தகவல்களை விரைவாக பகுப்பாய்வு செய்ய AI தொழில்நுட்பம் உதவுகிறது.

SEBI-யின் ஆய்வுபடி, FY26-ல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர் வர்த்தகர்களில் 87.7 சதவீதம் பேர் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால், முதலீட்டுக்கு முன் முறையான ஆய்வு தேவைப்படுகிறது.

Kwala Intel Pro வழங்கும் வசதிகள் என்ன?

பங்குகளின் நுழைவு மற்றும் வெளியேறும் நிலைகள் (Entry/Exit), ஆதரவு நிலை (Support), எதிர்ப்பு நிலை (Resistance), இலக்கு விலை மற்றும் ஸ்டாப் லாஸ் தொடர்பான தகவல்களை சுமார் 15 விநாடிகளில் Kwala Intel Pro வழங்குகிறது. மேலும், முக்கிய நிறுவனங்கள் மற்றும் துறைகள் தொடர்பான பொதுத் தரவுகளை ஆய்வு செய்தல், சந்தை நிலவரத்தைப் புரிந்துகொள்ள AI வழியாகக் கேள்விகளுக்குப் பதில் பெறுதல், பங்குகளின் விலை மற்றும் தொழில்நுட்பக் குறியீடுகளைப் பார்வையிடுதல் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.

பயனர்கள் தங்களுக்குத் தேவையான பங்குகளைக் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல், ஆங்கிலம் மட்டுமின்றி, பல இந்திய மொழிகளிலும் ஆய்வுத் தகவல்களைப் பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.

சந்தா கட்டணம் எவ்வளவு?

Kwala Intel Pro சந்தா மாதத்திற்கு ரூ.199 அல்லது ஆண்டுக்கு ரூ.1,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் ஜிஎஸ்டியும் அடங்கும்.

இருப்பினும், AI கருவிகள் வழங்கும் தகவல்கள் முதலீட்டில் லாபம் கிடைப்பதை உறுதி செய்யாது. பங்குச்சந்தை முதலீடுகளில் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதால், எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன் தகவல்களைச் சரிபார்த்து, இடர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India