• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explainer | Men’s Day vs Women’s Day : மகளிர் தினத்தை போல ஆண்கள் தினம் கொண்டாடப்படாதது ஏன்?

Explainer | Men’s Day vs Women’s Day : மகளிர் தினத்தை போல ஆண்கள் தினம் கொண்டாடப்படாதது ஏன்?

நவம்பர் 19ஆம் தேதியான இன்று, சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இந்த நாள் மட்டும் ஏன் மகளிர் தினம் போல கொண்டாடப்படுவதில்லை? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 19, 2026, 12:32 IST|Updated: Nov 19, 2026, 12:46 IST
joinshare
Explainer | Men’s Day vs Women’s Day : மகளிர் தினத்தை போல ஆண்கள் தினம் கொண்டாடப்படாதது ஏன்?
Image Credit: Mens Day vs Womens Day | source : X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

2

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

3

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

4

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

5

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சர்வதேச ஆண்கள் தினம், ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், அனைவருக்குள்ளும் ஒரு கேள்வி எழுகிறது. ஒரு சாரார், “ஏன் ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதில்லை..?” என்று கேட்க, இன்னொரு பக்கம், “ஆண்கள் தினத்தை கொண்டாட வேண்டும்..?” என்று கேட்கின்றனர். இதற்கு காரணம் என்ன? இந்த இரு தினங்களுக்கும் இடையே ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்..?

சர்வதேச ஆண்கள் தினம்..!

இந்த ஆண்டின் ஆண்கள் தினம், “எதிர்காலம் என்பது அனைவருக்குமானது” என்பதை கருப்பொருளாக கொண்டு கொண்டாடப்படுகிறது. உலகிற்கு ஆண்கள் ஆற்றி வரும் நேர்மறையான பங்களிப்புகளை அங்கீகரிப்பதோடு, அண்களின் மனநலம், உடல்நலம், நல்வாழ்வு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்கள் தினத்தை, 1999ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் தேதி டிரினிடாட் ம்ற்றும் டொபாகோவில் டாக்டர் ஜெரோம் டீலுக்சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இவர் இந்த நாளை தொடங்கினார். சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் ஆண்கள் ஆற்றும் சேவைகளை கவுரவிக்கும் பொருட்டு அனைத்து சமூகத்தினரையும் இதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இந்த நாள், உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவை பொருத்தவரை, இந்த நாளை முன்னெடுப்பதில், 2007ஆம் ஆண்டு உமா சல்லா மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட வேண்டியது அவசியம் ஆகும்.

சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும், குடும்ப பொறுப்புகளையும் சுமக்கும் அண்கள், தங்களுடைய சொந்த உடல்நலக்கவலைகளையும் மன அழுத்தங்களையும் பெரும்பாலும் யாரிடமும் வெளியில் சொல்வதில்லை எனும் கருத்து அனைவருக்கும் பரவலாக இருக்கிறது. மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து, உதவி தேடுவதற்கான வாய்ப்பை உருவாக்கி தரும் பொருட்டு இந்த நாள் முன்னெடுக்கப்படுகிறது.

மகளிர் தினம் vs ஆண்கள் தினம்:

”மகளிர் தினத்தை மட்டும் உலகளவில் எவ்ளோ பேர் கொண்டாடுகிறார்கள், பெண்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். ஏன் ஆண்கள் தினத்தை யாரும் கண்டுகொள்வதில்லை..?” என்ற கேள்வி பல ஆண்களுக்கு இருக்கலாம். இங்குதான், விவாதம் பிறக்கிறது. இதற்கு நாம் பதில் தேட வேண்டும் என்றால், கண்டிப்பாக வரலாற்றையும், சமூக கட்டமைப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மகளிர் தினம், 1900களில் பிறந்த தினமாகும். அந்த சமயத்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது, வேலைவாய்ப்பில் சம பங்கு கிடையாது. இவையனைத்தையும் மாற்றி அமைக்கும் பொருட்டு, பல்வேறு முன்னெடுப்புகளுக்கு பின்னர் மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினமானது சமூகத்தில் பல நாட்களாக நிலவிவந்த பாலின பாகுபாடுகளை உடைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்போதுவரை, பல்வேறு சூழ்நிலைகளில் இந்த சமூகம் ஒரு Patriarchal society அதாவது ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது. அதுவே நாம் 100 வருடம் பின் சென்று பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமான ஒன்றாக இருக்கிறது.

பெண்களுக்கு வெளியில் சென்று வேலை பார்க்கவோ, வாக்கு செலுத்தவோ, ஒரு வங்கி கணக்கு வைத்துக்கொள்ள கூட உரிமையற்ற நிலை இருந்தது. “பெண்களுக்கு முழு உரிமை அனைத்திலும் கிடைத்து விட்டது” என்று சொல்ல முடியாத நிலையும், இந்த 2026ஆம் ஆண்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாகவே, இப்போதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க | வேலையை விடப் போறீங்களா...? இந்த வீடியோ கொஞ்சம் பாருங்க... திகிலுட்டும் கூட்டம்

ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம், இதிலிருந்து முற்றிலும் மாறு படுகிறது. காரணம், ஏனென்றால், ஆண்கள் ஆண்களாக இருப்பதற்காக ஒரு குழுவாக ஒடுக்கப்படவில்லை. ஏனென்றால், வரலாற்று ரீதியாக சமூகத்தில் அனைத்து அதிகாரமும் அல்லது கணிசமான பெரும்பான்மை அதிகாரமும் ஆண்களிடமே இருந்துள்ளது. இதை தவிர்த்து, ஆண்கள் தினம் கொண்டாட முக்கிய காரணம், ஆண் சமூகத்தின் மத்தியில் மனநலன் குறித்து வெளிப்படையாக பேசப்படாமல் இருப்பதும், அதன் வெளிபாடாக பலர் தற்கொலை செய்வதும், அது குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதும்தான். ஆனால், இது “உங்கள் தினம் பெரிதா? எங்கள் தினம் பெரிதா?” என்று ஒரு போட்டிாக மாறும் போதுதான் அது பிரச்சனை ஆகிறது.

ஆண்கள் தினம் கொண்டாடப்படாததற்கு காரணம் என்ன?

மகளிர் தினம் கொண்டாடுவது, அவர்கள் இதுவை சமூகத்தை எதிர்த்து போராடி வென்று அதை கொண்டாடும் விதமாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஆண்கள் தினம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக இருக்கிறது.
ஆண்களுக்கு ஏதேனும் உணர்ச்சிபூர்வமான மற்றும்/அல்லது சமூகப் பிரச்சனைகள் இருந்தால், அதைச் சுற்றி ஒருவித களங்கம் நிலவுவதே இதற்குக் காரணம். சமூகம், ஆண்களை நடத்தும் விதத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றிப் பேச மக்கள் விரும்புவதில்லை, ஏனென்றால், யார் அதிகம் ஒடுக்கப்பட்டவர் என்பதைப் பார்க்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு போட்டி இருப்பதாக இந்த சமூகம் நினைக்கிறது.

சமூகம் இதுவரை கட்டமைத்துள்ள “ஆண்கள் என்றால் அழக்கூடாது, அன்பை காட்டக்கூடாது, பலமாக இருக்க வேண்டும்” போன்ற பொது புத்தியை இந்த நாள் கேள்வி கேட்பதால், இந்த நாளை விழிப்புணர்வு தினமாக வெளியில் பலர் கூறும் போது அது அப்படிப்பட்ட சிந்தனை இருப்பவர்களுக்கு தங்கள் மீது தாக்குதல் நடத்துவது போல தெரிகிறது. இதைத்தாண்டி, பெண்கள் போல, தாங்களும் கஷ்டப்படுவதாக கூறி, ஆண்கள் பலர் கூறுவதுண்டு. அவர்கள் பேசுவதை கேட்கையில், பல நூறு ஆண்டுகளாக பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலின பாகுபாடுகளை சான்றாக வைத்து பேசினால், “அதெல்லாம் அப்போ நடந்தது..இப்போ எதுவும் நடக்கல..” என்ற பேச்சுதான் எழுகிறது. இதுவும், மகளிர் மற்றும் மகளிர் உரிமைகளை ஆதரிக்கும் பலர் ஆண்கள் தினத்தை கொண்டாடாமல் போவதற்கு காரணமாகி போகிறது.

தீர்வு என்ன?

ஆண்-பெண் என எந்த பாலினத்தை சேர்ந்தவர்களும், அவரவர் பாலின சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுகையில், எதிரில் இருப்பவர் காது கொடுத்து கேட்டு, பரஸ்பர மரியாதை கொடுத்துக்கொண்டாலே இரு தினங்களையும் மனமுவந்து அனுசரிக்க வாய்ப்பு கிடைக்கலாம் என்பது, பெரும்பாலோனரின் கருத்தாக இருக்கிறது.

மேலும் படிக்க | EPFO CBT முக்கிய கூட்டம் இன்று: மாத ஓய்வூதியத்தில் 3 மடங்கு ஏற்றம்? காத்திருக்கும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer