SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explainer: 8வது ஊதியக் குழு... அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றமா? ஊழியர்களுக்கு லாபமா, நஷ்டமா?

8th Pay Commission Dearness Allowance: தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியைக் கணக்கிட CPI-IW (தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு) பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய குறியீட்டுத் தொடருக்கான அடிப்படை ஆண்டு 2016 (மதிப்பு 100) ஆகும். இதில் மாற்றம் வரக்கூடும்.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 17, 2026, 04:43 PM IST | Updated: Aug 21, 2026, 04:28 PM IST
Join

8th Pay Commission Dearness Allowance: 8-வது ஊதியக் குழு தன் பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும் நாளுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அகவிலைப்படியைக் (DA) கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் 'அடிப்படை ஆண்டு' (base year) குறித்தும் கேள்விகள் எழுகின்றன. அகவிலைப்படி கணக்கீட்டு முறை மாறவுள்ளதா? இதனால் ஊழியர்களுக்கு லாபமா நஷ்டமா? இந்த மாற்றம் எதனால் செய்யப்படுகின்றது? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியைக் கணக்கிட CPI-IW (தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு) பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய குறியீட்டுத் தொடருக்கான அடிப்படை ஆண்டு 2016 (மதிப்பு 100) ஆகும்.

இந்த CPI-IW தொடர் செப்டம்பர் 2020 முதல் நடைமுறையில் உள்ளதாக தொழிலாளர் நலப் பணியகத்தின் (Labour Bureau) கூறுகிறது. இது ஊதியம் மற்றும் அகவிலைப்படியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

8-வது ஊதியக் குழு

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது அடிப்படை ஆண்டு மாற்றப்படக்கூடுமா? அப்படி மாற்றப்பட்டால், அது ஊழியர்களின் அகவிலைப்படியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? முதலில், 'அடிப்படை ஆண்டு' என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

CPI-IW-ஐப் பொறுத்தவரை, அடிப்படை ஆண்டு என்பது ஒரு குறிப்பு ஆண்டாகும். இதன் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்படும் விலை மாற்றங்கள் அளவிடப்படுகின்றன. தற்போதைய CPI-IW தொடரில், 2016-ஆம் ஆண்டுக்கு 100 என்ற மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறியீட்டில் ஏற்படும் எந்தவொரு அடுத்தடுத்த உயர்வும், அந்த அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலையில் ஏற்படும் மாற்றங்களையே பிரதிபலிக்கிறது.

தொழாளர் நலப் பணியகத்தின்படி, CPI-IW தொடர் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது. 2016-க்கு முன்பு, 2001, 1982 மற்றும் 1960 போன்ற வெவ்வேறு அடிப்படை ஆண்டுகளைக் கொண்ட தொடர்கள் பயன்பாட்டில் இருந்தன. அதாவது, அடிப்படை ஆண்டை மாற்றுவது என்பது புதிய நடைமுறை அல்ல.

8-வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஆண்டு மாற்றப்படவுள்ளதா?

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: 2026-க்கு முன் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் கிடைக்காதா?

8-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியில் என்ன மாற்றம் ஏற்படும்?

8-வது ஊதியக் குழுவின் பணி என்பது வெறும் அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; ஊதியங்கள், படிகள், ஓய்வூதியம் மற்றும் பிற பணி நிபந்தனைகளை மறுஆய்வு செய்யும் பொறுப்பும் அக்குழுவிடம் உள்ளது.

அரசின் விதிமுறைகளின்படி, பொருளாதாரச் சூழல், நிதி ஒழுக்கம் மற்றும் ஊழியர்களின் தற்போதைய ஊதியம் மற்றும் படிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அக்குழு கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, புதிய ஊதிய முறையில் அகவிலைப்படி எவ்வாறு மாற்றியமைக்கப்படும்? புதிய கணக்கீடுகளுக்கான தொடக்கப் புள்ளி என்ன? புதிய ஊதிய விகிதத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்த விவரங்கள், அக்குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்து அரசு ஒப்புதல் அளித்த பின்னரே தெளிவாகும்.

மேலும் படிக்க | ஆண்டுக்கு 4 டிஏ உயர்வு, சூப்பரான சம்பள உயர்வு: ஊழியர் சங்க கோரிக்கைக்கு ஓகே சொல்லுமா மத்திய அரசு?

அகவிலைப்படி மீண்டும் 0%-லிருந்து தொடங்கக்கூடுமா?

ஆம், புதிய ஊதியக் கட்டமைப்பு அமல்படுத்தப்படும்போது, ​​அகவிலைப்படி சுழற்சி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அகவிலைப்படியை பூஜ்ஜியத்திற்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.

பொதுவாக, ஒரு ஊதியக் குழு அமல்படுத்தப்படும்போது, ​​புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது; அதைத் தொடர்ந்து வரும் அகவிலைப்படி கணக்கீடுகள் அந்த மாற்றியமைக்கப்பட்ட ஊதிய கட்டமைப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

ஊழியர்களைப் பொறுத்தவரை முக்கியமான கேள்வி என்னவென்றால், புதிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும்போது தற்போதைய அகவிலைப்படி எவ்வாறு, எந்த அளவிற்கு கருத்தில் கொள்ளப்படும் என்பதுதான். இதனால்தான், இம்முறை 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) மற்றும் அகவிலைப்படிக்கு இடையிலான தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

8-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியைக் கணக்கிடும் முறை மாறுமா?

CPI-IW (2016 அடிப்படை ஆண்டு), அகவிலைப்படி ரீசெட், ஃபிட்மென்ட் ஃபேக்டர் மற்றும் புதிய ஊதியத்தில் அவற்றின் தாக்கம் குறித்து அறிந்துகொள்வது முக்கியமாகும்.

7-வது ஊதியக் குழுவின்போதும் அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் தொடர்பான இதே போன்ற கேள்விகள் எழுந்தன. அக்காலத்தில், புதிய ஊதிய முறை 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. ஊதிய மேட்ரிக்ஸை (pay matrix) உருவாக்கும்போது, ​​7-வது ஊதியக் குழு தற்போதைய ஊதியம் மற்றும் அகவிலைப்படியைக் கணக்கில் கொண்டு 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரை நிர்ணயித்தது.

8-வது ஊதியக் குழு தற்போதைய அகவிலைப்படியை புதிய அடிப்படை ஊதியத்துடன் எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியமானதாக இருக்கும். இருப்பினும், 7-வது ஊதியக் குழு (7th CPC) பின்பற்றிய அதே அணுகுமுறையை 8-வது ஊதியக் குழுவும் (8th CPC) பின்பற்றுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தற்போதைய அகவிலைப்படி (DA) விகிதம் என்ன?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 60% ஆக உள்ளது. ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், அகவிலைப்படியில் 2% உயர்வை மத்திய அரசு அங்கீகரித்தது. இதனால் அகவிலைப்படி 58%-லிருந்து 60%-ஆக உயர்ந்தது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ₹18,000 என்றால், 60% அகவிலைப்படி பின்வருமாறு அமையும்:

₹18,000 × 60% = ₹10,800

இதன் விளைவாக, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் மொத்தத் தொகை:

₹18,000 + ₹10,800 = ₹28,800

இந்தத் தொகை 8-வது ஊதியக் குழுவின் கீழ் புதிய ஊதிய அமைப்பைத் தீர்மானிக்க அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டு, அதனுடன் உண்மையான ஊதிய உயர்வும் (salary increment) சேர்க்கப்பட்டால், புதிய அடிப்படை ஊதியம் தற்போதைய அடிப்படை ஊதியத்தை விட கணிசமாக அதிகமாக இருக்கக்கூடும்.

இதனால்தான், ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, 8-வது ஊதியக் குழுவிற்கான ஊதியக் கணக்கீட்டுக் கருவியைப் (Salary Calculator) பயன்படுத்தித் தங்கள் வருங்கால ஊதியத்தை மதிப்பிட்டு வருகின்றனர்.

அடிப்படை ஆண்டை மாற்றுவதால் என்ன நன்மை?

எதிர்காலத்தில் CPI-IW (தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு)-க்கான அடிப்படை ஆண்டுத் தொடர் மாற்றப்பட்டால், தற்போதைய நுகர்வு முறைகள் மற்றும் விலைகளின் அடிப்படையில் பணவீக்கத்தை இன்னும் துல்லியமாக அளவிடுவதே அதன் நோக்கமாக இருக்கும்.

இருப்பினும், ஒரு பொதுவான தவறான புரிதலைத் தெளிவுபடுத்துவது அவசியம்: அடிப்படை ஆண்டை மாற்றுவது என்பது தானாகவே ஊழியரின் அகவிலைப்படி (DA) அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல.

அடிப்படை ஆண்டில் செய்யப்படும் மாற்றம் குறியீட்டெண் கணக்கீடு மற்றும் தொடரை மாற்றியமைத்தாலும், அகவிலைப்படியின் மீதான உண்மையான தாக்கம், அதைக் கணக்கிட அரசாங்கம் பயன்படுத்தும் குறிப்பிட்ட சூத்திரம் மற்றும் விதிகளையே சார்ந்துள்ளது.

8-வது ஊதியக் குழு: முக்கிய அம்சம் என்னவாக இருக்கும்?

மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, இறுதி முடிவு மூன்று காரணிகளைச் சார்ந்திருக்கும்:

Basic Pay: முதலாவதாக, புதிய அடிப்படை ஊதியத்தின் நிர்ணயம்.
Fitment Factor: இரண்டாவதாக, ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கான நிர்ணயம்.
Dearness Allowance: மூன்றாவதாக, புதிய ஊதியக் கட்டமைப்பில் அகவிலைப்பட்யின் இணைப்பு.

கூடுதலாக, வீட்டு வாடகைப்படி (HRA), பயணப்படி (TA) மற்றும் பிற படிகளில் செய்யப்படும் மாற்றங்களும் மொத்த ஊதியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

8-வது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இது ஆலோசனை நடத்தி வருகிறது.

அகவிலைப்படி கணக்கீடு

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்.... 6% ஆகிறதா வருடாந்திர ஊதிய உயர்வு?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES