சென்னையின் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகித்து வரும் மெட்ரோ ரயில் சேவைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கணக்குப்படி, அக்டோபர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 408 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் 1 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்து 136 பயணங்களும், புதிதாகத் தொடங்கப்பட்ட மஞ்சள் வழித்தடத்தில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 272 பயணங்களும் பதிவாகியுள்ளன. பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனியை இணைக்கும் 14.64 கிலோமீட்டர் மஞ்சள் வழித்தடத்தில் 11 உயர்மட்ட