சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது மீஞ்சூரில் மேலும் ஒரு பிரம்மாண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இதற்காக, முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சென்னை குடிநீர் வாரியம் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1,240 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான