EY மற்றும் CII இணைந்து வெளியிட்டுள்ள 'Leapfrog 2032' ஆய்வறிக்கையின்படி, கோவையில் தற்போது 75-க்கும் மேற்பட்ட ஜிசிசி எனப்படும் உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை 2038-ஆம் ஆண்டுக்குள் சுமார் 200-ஐ எட்டும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, அடுத்த ஆறு ஆண்டுகளில் சுமார் 125 புதிய திறன் மேம்பாட்டு மையங்கள் கோவையில் உருவாகும் சாத்தியம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கோவையின் பொறியியல் திறன், தொழில்துறை அடித்தளம், திறமையான பணியாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் புத்தாக்கச் சூழல் ஆகியவை இதற்கு முக்கியப் பலமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கோவையில் சுமார் 38 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளனர். மேலும் 137 பொறியியல்