முதியோர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் சீனியர் லிவிங் குடியிருப்புத் திட்டங்கள். அந்த வகையில், கோவையில் பரிபூரணா செல்டர்ஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யம் சீனியர் லிவிங் பாரடைஸ் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூரை அடுத்த மாதம்பட்டி, கே.ஜி. மில் பகுதியில் அமையவுள்ள இந்தத் திட்டத்திற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. முதல் கட்டத் திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் அளித்த வரவேற்பால், அங்கிருந்த 200 வீடுகளும் விற்பனையாகியுள்ளன. இதையடுத்து, இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற நீதிபதி சோமசுந்தரம், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நல்லறம் அறக்கட்டளை மற்றும் ஐஏஎஸ் அகாடமி தலைவர் அன்பரசன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனம் ஜெயன்,