தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... தமிழக அரசு இலவச சிலிண்டர் வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தை 2027 ஜனவரி பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்த உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதுள்ள நிதி நெருக்கடி காரணமாக முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வழங்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. பொங்கலுக்கு முன்பாக இத்திட்டத்திற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் போலவே, பொதுமக்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்துப் பயனாளிகளாக இணையும் முறையைச் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ விதிமுறைகள் விரைவில் வெளியாக உள்ளன.