சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவருக்கு முனீஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 10- வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கணவன்- மனைவிகிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் விக்னேஸ்வரன் பொன்னுத்தாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 6- வயதில் மகள் உள்ள நிலையில் பொன்னுத்தாயும் விக்னேஸ்வரனை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். மகளை தன்னுடைய தாயார் வீட்டில் விட்டு விட்டு சென்னையில் விக்னேஸ்வரன் ஓட்டுனராகப் பணிபுரிந்து வந்தார். தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்தக் கிராமமான ஆலமரத்துப்பட்டிக்கு வந்திருந்த விக்னேஸ்வரன் மீண்டும் சென்னைக்குத் திரும்பிச் செல்லாமல் கிராமத்திலேயே இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவு நண்பர்கள், ஹரி பிரசாத், கோகுல் உள்ளிட்டோருடன் மது