கோவையில் திருச்சி சாலை, காமராஜர் சாலை மற்றும் வெள்ளலூர் சாலை சந்திக்கும் முக்கிய பகுதியாக சிங்காநல்லூர் விளங்குகிறது. அப்பகுதியில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கையெழுத்திடப்படாததால், பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்ததாரரை இறுதி செய்துள்ள நிலையில், முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
உழவர் சந்தை முதல் ஜெய் சாந்தி தியேட்டர் சந்திப்பு வரை, 2 புள்ளி 4 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 170 கோடியே 82 லட்சம் ரூபாய்