சென்னையின் சாலைப் போக்குவரத்தில் பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த மோட்டார் வாகனமற்ற போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தை, சென்னை மாநகராட்சி செயல்படுத்தவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, ராயப்பேட்டை - திருவல்லிக்கேணி மற்றும் அடையாறு - பெசன்ட் நகர் - திருவான்மியூர் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக மொத்தம் 31 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
முதலாவதாக, ராயப்பேட்டை - திருவல்லிக்கேணி வழித்தடத்தில் 6.49 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக 11 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5.12 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதைகள் சீரமைக்கப்படுவதுடன், 1.37 கிலோ மீட்டர் தூரம் நவீன தெருக்களாக மாற்றப்படும்.