கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. ஆனால் குற்றம்ச்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மற்றும் தவெக அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் இந்த விகாரத்தை கடுமையாக விமர்சித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில், இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்டஎஸ்பி சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கை நாளைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எஸ்பி சிருஷ்டி சிங் தனது தலைமையிலான விசாரணைக் குழுவுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.எம்எல்ஏ அருள்விக்னேஷிடம் காவல்துறை இதுவரை