ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 85க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று 4வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் ‘கேலோ இந்தியா’ மற்றும் ‘ஃபிட் இந்தியா’ திட்டங்கள் மூலம் அடிமட்ட அளவில் திறமையான வீரர்களைக் கண்டறிந்து சர்வதேசத் தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டதே இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார். மேலும், சாதனை படைத்த வீரர்களுக்கும், தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், 2036 ஒலிம்பிக் போட்டிக்காக இளைஞர்களைத் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.