தலைநகர் சென்னையின் 2-ஆவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில்... இப்போது இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தையே விரிவுபடுத்தும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது... அதன்படி, சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கவுல் பஜார் ஆகிய 3 பகுதிகளில் சுமார் 217 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை வருவாய்த்துறை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக அதிக அளவிலான நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தேவையில்லாத நிலப்பரப்புகள் விடுவிக்கப்பட்டு, தற்போது சுமார் 217 ஏக்கர் நிலம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில்... சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே விமான நிலைய