சிட்லப்பாக்கம் 44-வது வார்டுக்குட்பட்ட பவானி தெரு, பரதன் தெரு, பாபு தெரு, ராஜராஜேஸ்வரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு வாரம் ஒருமுறை பாலாறு கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் கருப்பு நிறத்திலும், கடுமையான துர்நாற்றத்துடனும் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைப் பயன்படுத்துவதால் வாந்தி, வயிற்றுவலி, குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் தோல் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் தண்ணீரில் குளிப்பதால் ஏற்பட்ட தோல் பாதிப்பை வயதான பெண் ஒருவர் தனது கைகளை காண்பித்து வேதனையுடன் விளக்குகிறார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரண்யாவிடம் கேட்டபோது, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும்,