கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஒரு கார் ஓட்டுநர் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் தப்பிக்கும் நோக்கில் அந்த கார் அங்கிருந்து நகரத்தொடங்கியது. அப்போது, தலைமை காவலர் வேல்முருகன் அந்த காரின் மீது தொற்றிக்கொண்டு காரை நிறுத்துமாறு ஓட்டுநரை வலியுறுத்தி சென்றார். இவ்வாறு துணிச்சலுடன் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க முயன்றார் தலைமை காவலர் வேல்முருகன்.
இந்நிலையில், தலைமை காவலர் வேல்முருகனின் நடவடிக்கையை அறிந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரடியாக பாராட்டியுள்ளார். தனது பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு அமைச்சரிடம் இருந்து நேரடியாக கிடைத்த பாராட்டு, வேல்முருகனுக்கு மகிழ்ச்சியையும், மேலும்