விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. கூலித் தொழிலாளியான இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியின் 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி ஹேமாவதிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், வீட்டில் கேக் வெட்டி குடும்பத்தினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளனர். பின்னர், பெற்றோருடன் வீட்டில் படுத்துத் தூங்கிய சிறுமி, அதிகாலையில் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் சிறுமியைக் காணவில்லை எனக் கூறப்படும் நிலையில், எழுந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட