கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் - மரகரம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயக்குமார், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவை உள்ளது.
இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், இந்த வழக்கில் சபாநாயகர்