குழந்தைகள் உடலாலும், மனதாலும் வலிமை மிக்கவர்களாக திறன்மிக்கவர்களாக இருக்க பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். "குழந்தைகள் நன்றாக படிக்கவும், திறமைசாலிகளாக இருக்கவும், நாம் தினசரி சாப்பிடும் உணவே போதுமானது. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு நாளாவது ரசம் உட்கொள்ள வேண்டும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் கண்டிப்பாக கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும். முட்டை சாப்பிட வேண்டும். இவை அனைத்தையும் விட முக்கியமாக, காலை வேளையில் 6 மணிக்குள் குழந்தைகள் எழும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகள் என்ன செய்யப்போகிறார்கள் என சில பெற்றோர்களே கேட்கிறார்கள். ஆனால், காலையில் 6-7 மணிக்குள் செய்ய வேண்டிய சில பணிகளை அந்த நேரத்தில்தான்