• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! கடைசி தேதி நீட்டிப்பு..விண்ணப்பிக்க தகுதி என்ன?

தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! கடைசி தேதி நீட்டிப்பு..விண்ணப்பிக்க தகுதி என்ன?

இந்தியாவில் இருக்கும் அரசு கிராம வங்கிகளில் வேலை செய்ய விரும்புபவர்கள், இந்த வேலைகு விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு தகவல் என்ன என்பதையும், இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 22, 2026, 01:52 PM IST|Updated: Sep 22, 2026, 02:05 PM IST
joinshare
தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! கடைசி தேதி நீட்டிப்பு..விண்ணப்பிக்க தகுதி என்ன?
Image Credit: RRB Recruitment 2026 | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

அரசு வங்கிகளான Regional Rural Banks-ல் வேலை செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இது. மொத்தம் மூன்று பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு அரசு வங்கிகளில் வேலை வாய்ப்பு:

தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் சுமார் 464 காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள், கடந்த 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த கடைசி தேதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதோ அது குறித்த முழு விவரம்.

பதவி: Office Assistant (Multipurpose)

சம்பளம் : ரூ.35,000 வரை
காலியிடங்கள் : 8222
கல்வித்தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு : 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.

பதவி : Officer Scale I

சம்பளம் : ரூ.60,000
காலியிடங்கள் : 4,256
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். தகவல் தொழில்நுட்பம் (IT), வனவியல், சட்டம், சந்தைப்படுத்தல், கால்நடை அறிவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு, மேலாண்மை, வேளாண்மை, வங்கியியல், நிதியியல், வேளாண் பொறியியல், தோட்டக்கலை ஆகிய துறைகளில் தொடர்புடைய பட்டங்கள்/டிப்ளமோக்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு : 18 முதல் 30 வரை

பதவி : Officer Scale II

சம்பளம் : ரூ.75,000 வரை
காலியிடங்கள் : 1047
கல்விதகுதி : பொது வங்கி அதிகாரி: ஏதேனும் ஒரு பட்டம் + 50% மதிப்பெண்கள் + 2 வருட வங்கி அனுபவம். தகவல் தொழில்நுட்ப அதிகாரி: தகவல் தொழில்நுட்பம் / கணினி அறிவியல் / மின்னணுவியல் துறையில் இளங்கலைப் பட்டம் (பட்டதாரிகள்) + 50% மதிப்பெண்கள் + 1 வருட அனுபவம். பட்டயக் கணக்காளர் (CA): பட்டயக் கணக்காளர் (CA) + 1 வருட அனுபவம். சட்ட அதிகாரி: சட்டப் பட்டம் + 50% மதிப்பெண்கள் + 2 வருட அனுபவம். கருவூல மேலாளர்: பட்டயக் கணக்காளர் (CA) / நிதித்துறையில் முதுகலை வணிக நிர்வாகப் பட்டம் (MBA Finance) + 1 வருட அனுபவம். சந்தைப்படுத்தல் அதிகாரி: சந்தைப்படுத்தலில் முதுகலை வணிக நிர்வாகப் பட்டம் (MBA Marketing) + 1 வருட அனுபவம். வேளாண்மை அதிகாரி: வேளாண்மை சார்ந்த பட்டம் + 50% மதிப்பெண்கள் + 2 வருட அனுபவம்.

மேலும் படிக்க | திருச்சி இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பதவி : Officer Scale III (Senior Manager)

சம்பளம் : ரூ.80,000 வரை
காலியிடங்கள் : 220
கல்விதகுதி : பட்டப்படிப்பு: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். வங்கியியல், நிதி, சந்தைப்படுத்தல், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை வளர்ப்பு, கால்நடை மருத்துவம், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் ஆகிய துறைகளில் பட்டம்/ பட்டயப்படிப்பு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அனுபவம் : குறைந்தது 5 வருடம் வரை வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்திருக்க வேண்டும். 
வயது வரம்பு : 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வுகள் :

SC/ST - 5 ஆண்டுகள்
OBC - 3 ஆண்டுகள்
Pwd (Gen/EWS) - 10 ஆண்டுகள்
PwBD (OBC) - 13 ஆண்டுகள்
PwBD (SC/ST) - 15 ஆண்டுஅக்ள்
Ex Servicemen - அரசு விதிப்படி

தமிழ்நாடு கிராம வங்கி காலியிடங்கள் :

Office Assistant - 244
Officer Scale I - 90
Officer Scale II - 82
Officer Scale III - 48

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

ST/SC/Ex-s/PWD - ரூ.175
பிறருக்கு : ரூ.850

தேர்வு செய்யப்படும் முறை:

Office Assistants :

Preliminary Exam
Mains Exam (Objective)

Officer Scale - I பதவிக்கு

Preliminary Examination
Mains Exam (Objective)
நேர்காணல்

Officer Scale II Scale III பதவிக்கு:

Preliminary Exam
Mains Exam (Objective)
நேர்காணல்

Officer Scale II, Officer Scale III பதவிக்கு

Single Level Exam (Objective)
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில், IBPS-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
  • "CRP RRBs XV Recruitment" என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்குரிய (Office Assistant (Multipurpose) அல்லது Officer Scale-I / II / III) "Apply Online" என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
  • "Click Here for New Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பெயர், அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டுப் பதிவு செய்யவும்.
  • உருவாக்கப்பட்ட பதிவு எண் (Registration Number) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
  • கல்வித் தகுதி, வயது, முகவரி மற்றும் பிரிவு (category) உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • இணையவழிப் பணம் செலுத்தும் முறை மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • இறுதியாக, பதிவுசெய்தல் செயல்முறையை நிறைவு செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும் அல்லது அச்சிடவும்.
  • குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதி நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.09.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | டிகிரி இருக்கா? ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்: அக்டோபர் 8 முதல் விண்ணப்ப செயல்முறை தொடக்கம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu