• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /டிகிரி இருக்கா? உள்ளூர் வங்கியில் வேலை! 13,706 பணியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 464... உடனே அப்ளை பண்ணுங்க

டிகிரி இருக்கா? உள்ளூர் வங்கியில் வேலை! 13,706 பணியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 464... உடனே அப்ளை பண்ணுங்க

IBPS CRP RRBs XV Recruitment 2026: மண்டல கிராமப்புற வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பில் தமிழ்நாடு கிராம வங்கிகளில் மட்டும் 464 காலியிடங்கள் உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இப்போது IBPS-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்யும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.

Written BySripriya Sambathkumar
Published: Sep 01, 2026, 14:26 IST|Updated: Sep 01, 2026, 14:35 IST
joinshare
டிகிரி இருக்கா? உள்ளூர் வங்கியில் வேலை! 13,706 பணியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 464... உடனே அப்ளை பண்ணுங்க
Image Credit: IBPS CRP RRBs XV Recruitment 2026 (Representative Image)

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IBPS CRP RRBs XV Recruitment 2026: மண்டல கிராமப்புற வங்கிகளுக்கான (RRBs) பொது ஆட்சேர்ப்பு செயல்முறை (CRP RRBs 15)-க்கான விண்ணப்பங்களை 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பர்சனல் செலக்ஷன்' (IBPS) தொடங்கியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது குரூப் "A" அதிகாரிகளுக்கான (Scale 1, Scale 2 மற்றும் Scale 3) பணியிடங்கள் மற்றும் குரூப் "B" அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பணியிடங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் பல்வேறு பதவிகளில் மொத்தம் 13,706 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழ்நாடு கிராம வங்கிகளில் மட்டும் 464 காலியிடங்கள் உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன் தகுதி நிபந்தனைகள், தேர்வு முறை மற்றும் தேர்வு செயல்முறை ஆகியவற்றை கவனமாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இப்போது IBPS-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்யும் செயல்முறையை மேற்கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 21, 2026 வரை இருக்கும். பதிவு செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, இரண்டு நாட்களுக்கு விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

IBPS CRP RRBs XV Recruitment 2026: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்13,706, தமிழகத்தில் 464
பணியிடம்தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும்
விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் 01.09.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்21.09.2026

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியரக வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்..இன்றே கடைசி

IBPS CRP RRBs XV Recruitment 2026: பணியிட விவரங்கள்

CRP RRBs 15-இன் கீழ் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி நிலை பதவிகளுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பதவி வாரியான பணியிட விவரங்கள், சம்பளம், கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களை இங்கே காணலாம்.

1. அலுவலக உதவியாளர் (பல்நோக்கு): Office Assistant (Multipurpose)

பதவி: அலுவலக உதவியாளர் (பல்நோக்கு)
காலியிடங்கள்: 8,183 (தமிழ்நாட்டில்: 244) 
சம்பளம்: ரூ.35,000
வயது வரம்பு: 18 முதல் 28 வரை

கல்வித் தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம்

2. அதிகாரி Scale 1 (PO)

பதவி: அதிகாரி Scale 1
காலியிடங்கள்: 4,256 (தமிழ்நாட்டில்: 90)
சம்பளம்: ரூ.60,000
வயது வரம்பு: 18 முதல் 30 வரை

கல்வித் தகுதி:

  • ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். 
  • தகவல் தொழில்நுட்பம் (IT), வனவியல், சட்டம், சந்தைப்படுத்தல், கால்நடை மருத்துவம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு, மேலாண்மை, வேளாண்மை, வங்கிச் சேவை, நிதி, வேளாண் பொறியியல், தோட்டக்கலை ஆகிய துறைகளில் தொடர்புடைய பட்டங்கள் அல்லது பட்டயப் படிப்புகளை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

3. அதிகாரி Scale 2 (மேலாளர்)

பதவி: அதிகாரி Scale 2 (மேலாளர்)
காலியிடங்கள்: 1,047 (தமிழ்நாட்டில்: 82)
சம்பளம்: ரூ.75,000
வயது வரம்பு: 21 முதல் 32 வரை

கல்வித் தகுதி:

  • பொது வங்கி அதிகாரி (General Banking Officer): ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு + 50% மதிப்பெண்கள் + 2 ஆண்டுகள் வங்கிப் பணி அனுபவம்.
  • தகவல் தொழில்நுட்ப அதிகாரி (IT Officer): தகவல் தொழில்நுட்பம் (IT) / கணினி அறிவியல் / மின்னணுவியல் துறையில் இளங்கலைப் பட்டம் + 50% மதிப்பெண்கள் + 1 ஆண்டு அனுபவம்.
  • CA: CA தகுதி + 1 ஆண்டு அனுபவம்.
  • சட்ட அதிகாரி (Law Officer): சட்டப் படிப்பு (Law Degree) + 50% மதிப்பெண்கள் + 2 ஆண்டுகள் அனுபவம்.
  • கருவூல மேலாளர் (Treasury Manager): CA / MBA (நிதி/Finance) + 1 ஆண்டு அனுபவம்.
  • சந்தைப்படுத்தல் அதிகாரி (Marketing Officer): MBA (சந்தைப்படுத்தல்/Marketing) + 1 ஆண்டு அனுபவம்.
  • வேளாண் அதிகாரி (Agriculture Officer): வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு + 50% மதிப்பெண்கள் + 2 ஆண்டுகள் அனுபவம்.

4. அதிகாரி நிலை 3 (மூத்த மேலாளர்)

பதவி: அதிகாரி நிலை 3 (மூத்த மேலாளர்)
காலியிடங்கள்: 220 (தமிழ்நாட்டில்: 48)
சம்பளம்: ரூ.80,000
வயது வரம்பு: 21 முதல் 40 வரை

கல்வித் தகுதி:

  • ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • வங்கிப் பணி, நிதி, சந்தைப்படுத்தல், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை வளர்ப்பு, கால்நடை மருத்துவம், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் ஆகிய துறைகளில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் படிக்க | அஞ்சல் துறையில் வேலை: 23,757 காலியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 2118!! உடனே அப்ளை பண்ணுங்க

ஆட்சேர்ப்பில் பங்கேற்கும் மண்டல ஊரக வங்கிகள்:

  • ஆந்திரப் பிரதேச கிராமீன் வங்கி
  • அருணாச்சலப் பிரதேச ஊரக வங்கி
  • அசாம் கிராமீன் வங்கி
  • பீகார் கிராமீன் வங்கி
  • சத்தீஸ்கர் கிராமீன் வங்கி
  • குஜராத் கிராமீன் வங்கி
  • ஹரியானா கிராமீன் வங்கி
  • இமாச்சலப் பிரதேச கிராமீன் வங்கி
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் கிராமீன் வங்கி
  • ஜார்க்கண்ட் கிராமீன் வங்கி
  • கர்நாடக கிராமீன் வங்கி
  • கேரள கிராமீன் வங்கி
  • மத்தியப் பிரதேச கிராமீன் வங்கி
  • மகாராஷ்டிர கிராமீன் வங்கி
  • மணிப்பூர் ஊரக வங்கி
  • மேகாலயா ஊரக வங்கி
  • மிசோரம் ஊரக வங்கி
  • நாகாலாந்து ஊரக வங்கி
  • ஒடிசா கிராமீன் வங்கி
  • புதுச்சேரி கிராமீன் வங்கி
  • பஞ்சாப் கிராமீன் வங்கி
  • ராஜஸ்தான் கிராமீன் வங்கி
  • தமிழ்நாடு கிராமீன் வங்கி
  • தெலுங்கானா கிராமீன் வங்கி
  • திரிபுரா கிராமீன் வங்கி
  • உத்தரப் பிரதேச கிராமீன் வங்கி
  • உத்தராகண்ட் கிராமீன் வங்கி
  • மேற்கு வங்க கிராமீன் வங்கி

IBPS CRP RRBs XV Recruitment 2026: விண்ணப்ப கட்டணம்

  • ST/ SC/ Ex-s/ PWD: ரூ.175
  • மற்றவர்கள்: ரூ.850

IBPS CRP RRBs XV Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை

  1. இதற்கு முதலில் IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில் CRP RRBs XV Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
  3. உங்கள் பதவிக்கு ஏற்ப: Office Assistant (Multipurpose) அல்லது Officer Scale-I / II / III என்ற Apply Online link-ஐ தேர்வு செய்யவும்.
  4. “Click Here for New Registration” என்பதை கிளிக் செய்யவும்.
  5. பெயர், மொபைல் எண், Email போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு Registration செய்யவும்.
  6. கிடைக்கும் Registration Number & Password-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
  7. விண்ணப்பப் படிவத்தில் கல்வித்தகுதி, வயது, முகவரி, Category ஆகிய விவரங்களை நிரப்பவும்.
  8. புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
  9. விண்ணப்பக் கட்டணத்தை Online Payment மூலம் செலுத்தவும்.
  10. நிறைவாக Complete Registration என்பதை கிளிக் செய்து, பதிவு படிவத்தை டவின்லோட்/பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யலாம்.

மேலும் படிக்க | +2 படித்தவரா? ஆதார் மையத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu