Kanyakumari Govt Job: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நாகர்கோவில், வடசேரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் இயங்கும் மாநகர பொது சுகாதார ஆய்வகத்திற்கு கீழ்கண்ட தற்காலிக பதவிகள் வெளிகொணர்வு முகமை மூலம் தேர்ந்தெடுக்க வெளிகொணர்வு முகமை நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி பட்டியல் வரவேற்கப்படுகிறது.
இதனை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், நாகர்கோவில் 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ முத்திரையிடப்பட்ட உறையில் (Sealed Cover) 20.10.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இயங்கி வரும் மாநகர பொது சுகாதார ஆய்வகத்தில் கீழ்க்கண்டுள்ள பதவிகள் வெளிக்கொணர்வு முறையில் தேர்ந்தெடுக்கபப்பட உள்ளது.
| பணி விவரம் | காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை |
| நுண்ணுயிரியாளர் (Microbiologist) | 01 |
| ஆய்வக நுட்புநர் நிலை 3 (Lab Techinician) | 01 |
| ஆய்வக உதவியாளர் (Lab Assistant) | 01 |
நுண்ணுயிரியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் MSC (Medical Microbiology) படித்திருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ.44000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வக நுட்புநர் நிலை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் DMLT படித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.17,000 வழங்கப்படும். ஆய்வக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.11,000 மாத சம்பளமாக வழங்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கு Kanyakumari.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அக்டோபர் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நிருவாக செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் /மாவட்ட சுகாதார அலுவலர், நாகர்கோவில் சுகாதாரப்பகுதி மாவட்டம். தலைவர், மாவட்ட சுகாதார சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் /மாவட்ட ஆட்சித்தலைவர், கன்னியாகுமரி மாவட்டம் (இ) நாகர்கோவில். உங்கள் பதவிகளுக்கு ஏற்ப உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.