TNPSC Group 4 Free Coaching: சேலம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC Group IV தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகின்ற 14.10.2026 அன்று முதல் துவங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளதாவது: சேவம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள TNPSC Group IV தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகின்ற 14.10.2026 (புதன்கிழமை) காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பானது போட்டித்தேர்வுகளில் அனுபவம் மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு உடனுக்குடன் மதிப்பெண் வழங்கப்படும். தேர்வுக்கான அனைத்து புத்தகங்களும் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் TNPSC, TRB, MRB. TNUSRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
அவற்றில் மொத்தம் 3,736 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதில் நாளது தேதிவரை 563 நபர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு
அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் TNPSC Group IV தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மத்திய / மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்று மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படை, மத்திய பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நில அளவைத்துறை, கருவூலத்துறை, நீதித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை, புள்ளியியல்துறை மற்றும் காவல்துறை போன்ற துறைகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026-ம் ஆண்டின் குரூப் IV தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான மொத்த பணிக்காலியிடங்கள் 6,574 ஆகும். மேலும். இதற்கான தேர்வு 10.01.2027 அன்று நடைபெறவுள்ளது. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இத்தேர்விற்கு பww.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 05.11.2026 ஆகும். கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10.10.2026 சனிக்கிழமை அன்று துவக்கப்பட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும், டி.என்.பி.எஸ்.சி. குரூப் IV தேர்வின் பொதுத்தமிழுக்கு பிரத்யேசுமாக 7 எண்ணிக்கையிலான தொடர் மாதிரித்தேர்வுகள் 24.10.2026, 07.11.2026, 21.11.2026, 05.12.2026, 12.12.2026, 19.12.2026, மற்றும் 26.12.2026 ஆகிய தேதிகளில் பாடத்திட்டத்தில் உள்ளவாறு அலகு வாரியாக நடைபெற உள்ளன.
மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி, மாடூர் டோல் கேட் அருகில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விருப்பம் உள்ளவர்கள் நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மாதிரித்தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdsxTCBgXdnm3MQTqnRSONtRbFjPVu5dx4O5bGVJMoK3f7z-A/viewform?pli=1 என்ற பக்கத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04151 -295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.