• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /அரசியலுக்கு வரும் நயன்தாரா? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்! என்ன சொன்னார்?

அரசியலுக்கு வரும் நயன்தாரா? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்! என்ன சொன்னார்?

நடிகை நயன்தாராவின் அரசியல் என்ட்ரி குறித்த தகவல் இணையத்தில் வலம் வந்து காெண்டிருக்கும் நிலையில், அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் இதற்கு பதிலளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 13, 2026, 10:13 AM IST|Updated: Oct 13, 2026, 10:27 AM IST
joinshare
அரசியலுக்கு வரும் நயன்தாரா? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்! என்ன சொன்னார்?
Image Credit: Nayanthara Political Entry Rumors | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம். விஜய் பாலாஜி

நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம். விஜய் பாலாஜி

2

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி! சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

3

இன்னும் 15 தொகுதிக்கு இடைத்தேர்தலா? போட்டு உடைத்த செங்கோட்டையன்.. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா?

4

அரசியலுக்கு வரும் நயன்தாரா? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்! என்ன சொன்னார்?

5

8வது ஊதியக் குழு: எகிறப்போகும் சம்பளம், ஓய்வூதியம்... அரசு ஊழியர்களுக்கு மொத்தமாய் மாறப்போகும் அமைப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர், நயன்தாரா. முதல்வர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலர் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கும் சமயத்தில், தற்போது நடிகை நயன்தாராவும் அரசியலுக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா!

நடிகை நயன்தாரா, தன்னுடைய சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்தில், அடுத்தடுத்து வரும் பல்வேறு படங்களில் கமிட் ஆனவராக இருந்தவர்தான். நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் காதல் பூத்தது. இதற்கு ஐந்து வருடங்களுக்கு பிறகு, திருமணமாகி 2 குழந்தைகளுடன் நயன்தாரா செட்டில் ஆகி விட்டார். அதன் பிறகு படங்களில் நடித்து வந்தாலும், அடுத்தடுத்து நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

வருடத்திற்கு 1 படத்தில் மட்டுமே நடித்து வந்த நயன்தாராவிற்கு, தொடர்ந்து இந்த வருடத்தில் மட்டும் ஹாய், டாக்சிக் என இரு படங்கள் சிக்கியது. ஆனால், அந்த இரு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதிலும் குறிப்பாக, டாக்ஸிக் திரைப்படம் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

அம்மனாக நயன்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நயன்தாரா நடித்து ஹிட் ஆன திரைப்படம், மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. இதிலும், நயன்தான் அம்மனாக நடிக்கிறார். இதனை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி, இந்த படமாவது நயன்தாராவிற்கு வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், இந்த சினிமா மார்கெட்டை நம்பமுடியாது என்று முடிவெடுத்த நயன்தாரா, விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இணையம் முழுவதும் நெட்டிசன்கள் சலசலத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | வித்யா பாலனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு?

அரசியலுக்கு வரும் நயன்?

நடிகை நயன்தாரா, வரும் 2031ஆம் ஆண்டிற்குள், அரசியலுக்கு வருவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் எட்டிப்பார்த்தது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்பு அரசியலில் எண்ட்ரியான விஜய், இன்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது, திரைத்துறையில் இருக்கும் பல பேருக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டிருக்கிறது. இதன் காரணமாக, நயன்தாராவும் அரசியலுக்கு வருவாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, விக்னேஷ் சிவனிடமிருந்து பதில் வந்துள்ளது.

விக்னேஷ் சிவன் சொன்னது என்ன?

நயன்தாராவின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், நயன், தற்போது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிப்பதிலும், வீட்டை பார்த்து கொள்வதிலும் கவனம் செலுத்தி வருவதாகவும், அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிறைவுமே தங்களுக்கு இப்போது போதுமானதாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால், நயன்தாராவின் அரசியல் எண்ட்ரி குறித்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியில் கமிட் ஆன நயன்தாரா!

நயன்தாராவிற்கு, ‘ஜவான்’ படத்திற்கு பிறகு இந்தியில் மார்க்கெட் கூடி விட்டது. இதன் காரணமாகவே அவருக்கு டாக்ஸிக் பட வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த சமயத்தில், சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, வம்சி பைடபள்ளி ஒரு படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இதில், நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அவருக்கு மேலும் இந்தியில் நடிக்க பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | த்ரிஷாவுக்கு ரகசியத் திருமணமா? வைரலாகும் லண்டன் புகைப்படம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema