இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை: டிகிரி பொதும்.... எப்படி விண்ணப்பிப்பது?
RRB Station Master Recruitment 2026: நாடு முழுவதும் உள்ள 1250 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை (CEN 08/2026) ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும்போது, தகுதிக்கான அளவுகோல்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செயல்முறை, தேர்வு முறை போன்ற கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
RRB Station Master Recruitment 2026: இந்திய ரயில்வே பணியாளர் தேர்வின் கீழ், ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்காகக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நற்செய்தி. ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://rrb.indianrailways.gov.in/-இல், 2026-ஆம் ஆண்டிற்கான ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வின் மூலம் மொத்தம் 1250 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை 7-வது ஊதியக் குழுவின் (7th CPC) ஊதிய மேட்ரிக்ஸில் 'நிலை-6' (Level-6) பிரிவின் கீழ் வருகின்றன. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 27, 2026) தொடங்குகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 25, 2026 அன்று இரவு 11:59 மணிக்குள் (23:59) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
RRB Station Master Recruitment: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இந்தப் புதிய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஸ்டேஷன் மாஸ்டர் பணி குறித்த தகுதிகள், தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.
RRB Station Master Recruitment: முக்கிய அம்சங்கள்
நாடு முழுவதும் உள்ள 1250 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை (CEN 08/2026) ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும்போது, தகுதிக்கான அளவுகோல்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செயல்முறை, தேர்வு முறை போன்ற கூடுதல் விவரங்கள் தெரியவரும். இந்த விரிவான அறிவிப்பின் மூலம், மண்டல வாரியான காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு தொடர்பான பிற முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
RRB ஸ்டேஷன் மாஸ்டர் அறிவிப்பு 2026: காலிப்பணியிடங்கள்
ரயில்வே அமைச்சகம், CEN எண் 08/2026-இன் கீழ் ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து RRB மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 1250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
RRB Station Master Recruitment:
| அம்சம் | விவரம் |
| தேர்வு பெயர் | ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி நியமனம் 2026 |
| நடத்தும் அமைப்பு | ரயில்வே பணி நியமன வாரியங்கள் (RRBs) |
| பதவியின் பெயர் | ஸ்டேஷன் மாஸ்டர் |
| விளம்பர எண் | CEN 08/2026 |
| காலியிடங்கள் | 1250 |
| ஊதிய நிலை | 7-வது மத்திய ஊதியக் குழுவின் (7th CPC) நிலை-6 (Level-6) |
| ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை தொடங்கும் தேதி | அக்டோபர் 27, 2026 |
| ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி | நவம்பர் 25, 2026 |
| கல்வித் தகுதி | பட்டப்படிப்பு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://rrb.indianrailways.gov.in/ |
மேலும் படிக்க | IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
RRB Station Master Recruitment: தேர்வு செய்யும் முறை
- கணினி அடிப்படையிலான சோதனை (Computer Based Test - CBT)
- கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (Computer Based Aptitude Test - CBAT)
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
- மருத்துவ பரிசோதனை (Medical Examination)
RRB Station Master Recruitment: விண்ணப்பிக்கும் முறை
- இதற்கு முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- அதன் பிறகு CEN 08/2026 – STATION MASTER என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- புதிய பதிவை செய்து மொபைல் எண மற்றும் மின்னஞ்சல் முகவரி கொண்டு பதிவு செய்யவும்.
- லாக் இன் செய்து உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
- அதன் பிறக்ய் கல்வித் தகுதி மற்றும் உங்கள் டிகிரி தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
- தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் ஆவணங்களை அப்லோச் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.
- இறுதியாக விண்ணப்பித்தை சமர்ப்பித்து எதிர்கால தேவைகளுக்கு அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் படிக்க | TNPSC குரூப் 4 தேர்வு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு.. எப்படி கலந்து கொள்ளலாம்?