• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு, உடனே அப்ளை பண்ணுங்க

8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு, உடனே அப்ளை பண்ணுங்க

Chengalpattu Recruitment News: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, தொகுப்பூதியம், வயது வரம்பு ஆகிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

Written BySripriya Sambathkumar
Published: Sep 10, 2026, 11:09 IST|Updated: Sep 10, 2026, 11:16 IST
joinshare
8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு, உடனே அப்ளை பண்ணுங்க
Image Credit: Representative / Chengalpattu Recruitment News

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chengalpattu Recruitment News: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் பணியாற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் கூடுதலாக பணியாற்றிட உதவியாளருடன் கூடிய அமர்வு எழுத்தர் (Assistant cum Bench Clerk), இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் (Junior Assistant Cum Record Clerk) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை கீழ் குறிப்பிட்டுள்ள விவரப்படி தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு (தற்காலிக வேலை)
காலியிடங்கள்03
பணியிடம்செங்கல்பட்டு, தமிழ்நாடு
விண்ணப்ப செயல்முறை தொடக்க நாள்08.09.2026
விண்ணபிக்க கடைசி நாள்22.09.2026

மேலும் படிக்க | 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 2,536 காலியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க

இந்த காலிப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, தொகுப்பூதியம், வயது வரம்பு ஆகிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

1. Assistant cum Bench Clerk

பதவி: உதவியாளருடன் கூடிய அமர்வு எழுத்தர்
காலியிடங்கள்: 01
ஊதியம்: மாதம் ரூ.25,000
வயது வரம்பு: 42 வயதுக்குக் கீழ்

கல்வி தகுதி:

  • இந்தியாவில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், 10+2+3 அல்லது 11+1+3 கல்வி முறையில் அறிவியல், கலை, வணிகம், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் நடந்தால், ​​தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் 'அலுவலகத் தன்னியக்கத்தில் கணினி' (Computer on Office Automation) தகுதி அல்லது இந்தியாவில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினியில் வேறு ஏதேனும் பட்டயப் படிப்பு / பட்டப்படிப்பு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுச் சான்றிதழ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2. Junior Assistant Cum Record Clerk

பதவி: இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர்
காலியிடங்கள்: 01
ஊதியம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 42 வயதுக்குக் கீழ்

கல்வி தகுதி:

  • மாநில அல்லது மத்திய வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட SSLC (10 ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினியில் தேர்ச்சி.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுச் சான்றிதழ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் படிக்க | ஊரக வளர்ச்சித்துறையில் வேலை! 10வது வரை படிச்சிருந்தா போதும்..எப்படி விண்ணப்பிப்பது?

3. Office Assistant

பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
ஊதியம்: மாதம் ரூ.13,000
வயது வரம்பு: 42 வயதுக்குக் கீழ்

கல்வி தகுதி

  • ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட மாநில அல்லது தனியார் பள்ளிக் கல்வி வாரியத்திலிருந்து எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியே விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி தகுதிக்கான அனைத்துச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் நகல்களுடன் 2209.2026 அன்று மாலை 5.45 க்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அறை எண்.F0-06. தரை தளம். F. Block,
புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம்.
செங்கல்பட்டு 603 111

தொலைபேசி: 6382613173 மற்றும் 9789422159

அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே காணலாம்.
விண்ணப்பங்களை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | மாதம் ரூ.58,000 சம்பளம்! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu