10வது முதல் டிகிரி வரை... அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு காலியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?
Cuddalore District Recruitment News: கடலூர் மாவட்டம் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Cuddalore District Recruitment News: கடலூர் மாவட்டத்தில் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
கடலூர் மாவட்டம் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கீழ்கண்ட பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், காலியாக உள்ள பணியிடங்கள், பதவியின் பெயர், கல்வித் தகுதி, வயது வரம்பு, மாத சம்பளம் ஆகிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு: முக்கிய அம்சங்கள்
| விவரம் | அம்சம் |
| அமைப்பு | அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் |
| பதவி | பல்வேறு பதவிகள் |
| விண்ணப்ப செயல்முறை தொடங்கிய தேதி | ஆகஸ்ட் 22 |
| விண்னப்பிக்க கடைசி நாள் | செப்டம்பர் 9 |
| விண்ணப்பம் | www.cuddalore.nic.in |
மேலும் படிக்க | EPFO அதிகாரி வேலை: டிகிரி போதும், 80 காலியிடங்கள், ரூ.56,100 - ரூ.1,77,500 சம்பளம்
காலிப்பணிடங்களின் விவரங்களை காணலாம்:
1. மருத்துவ அலுவலர்
பதவி: மருத்துவ அலுவலர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.63,000
கல்வித் தகுதி:
- இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பெற்ற MBBS அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கட்டாய ரோட்டேட்டர் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
2. ANM
பதவி: ANM
காலியிடங்கள்: 06
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.17,500
கல்வித் தகுதி:
- மேல்நிலைப் பள்ளித் தேர்வு மற்றும்
- மருத்துவக் கல்வித் துறை (DME) அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் நடத்தப்படும் ஒன்றிரண்டு வருட ANM படிப்பு / செவிலியர் படிப்பு.
3. RBSK மருந்தாளர்
பதவி: RBSK மருந்தாளர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.18,000
கல்வித் தகுதி:
- டி.பார்ம் பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் அது மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
4. ஆய்வக நுட்புநர்
பதவி: ஆய்வக நுட்புநர்
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.17,000
கல்வித் தகுதி:
- இடைநிலை (10+2) மற்றும்
- மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் அல்லது உபகரணங்களில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு.
5 ICTC/ஆய்வக நுட்புநர்
பதவி: ICTC/ஆய்வக நுட்புநர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.17,000
கல்வித் தகுதி:
- இடைநிலை (10+2) மற்றும்
- மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் அல்லது உபகரணங்களில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு.
6. ICTC ஆலோசகர்
பதவி: ICTC ஆலோசகர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.21,000
கல்வித் தகுதி:
- சமூகப் பணி முதுகலை (MSW)/செவிலியர் இளங்கலை (B.Sc)
7. நடுத்தர நிலை சுகாதார வழங்குநர்
பதவி: நடுத்தர நிலை சுகாதார வழங்குநர்
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.21,000
கல்வித் தகுதி:
- இந்திய செவிலியர் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பொது செவிலியர் மற்றும் மகப்பேறு பட்டயப் படிப்பு (DGNM) அல்லது
- பி.எஸ்சி., நர்சிங் பட்டம்.
8. சுகாதார ஆய்வாளர் GR-11
பதவி: சுகாதார ஆய்வாளர் GR-11
காலியிடங்கள்: 31
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.17,500
கல்வித் தகுதி:
- I. உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- II. SSLC அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- III. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட, காந்திகிராம் ஊரக நிறுவனப் பயிற்சிப் பாடநெறி உட்பட, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம்/அறக்கட்டளைகள்/பல்கலைக்கழகங்கள்/நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர்/சுகாதார ஆய்வாளர் பாடநெறிப் பயிற்சிக்கான இரண்டு வருடச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
பதவி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.11,000
கல்வித் தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ் தெளிவாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
10. ஓமியோபதி மருத்துவர் (PG Qualification)
பதவி: ஓமியோபதி மருத்துவர் (PG Qualification)
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.60,000
கல்வித் தகுதி:
- முதுகலைப் பட்டம்
- தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம் / TSMC / TNHMC போன்ற மாநிலத்தின் அந்தந்த வாரியம் / கவுன்சிலில் பதிவு.
11. யோகா பயிற்றுநர் (BNYS Qualification)
பதவி: யோகா பயிற்றுநர் (BNYS Qualification)
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.28,000
கல்வித் தகுதி:
- BYNS பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆகும்.
12. மருந்தாளுநர் (ஆயூஷ்)
பதவி: மருந்தாளுநர் (ஆயூஷ்)
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வித் தகுதி:
- அரசு அங்கீகாரம் பெற்ற இந்திய மருத்துவ நிறுவனத்தில் 2 வருடப் படிப்பை முடித்த தகுதிவாய்ந்த மருந்தாளுநர்.
13. ஆயூஷ் மருத்துவ அலுவலர் (சித்தா)
பதவி: ஆயூஷ் மருத்துவ அலுவலர் (சித்தா)
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.40,000
கல்வித் தகுதி:
- SSLC, HSC., பட்டம்
- தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம்/TSMC/TNHMC போன்ற மாநிலத்தின் அந்தந்த வாரியம்/சபையில் பதிவு.
14. மருந்து வழங்குநர் (சித்தா)
பதவி: மருந்து வழங்குநர் (சித்தா)
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.18,000
கல்வித் தகுதி:
- SSLC, HSC., D.Pham (Ayush), ஒருங்கிணைந்த மருந்தியல்/படிப்பு (தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சான்றிதழ் மட்டும்)
15. சிகிச்சை உதவியாளர் (ஆண்)
பதவி: மருந்து வழங்குநர் (சித்தா)
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,000
கல்வித் தகுதி:
- SSLC., HSC., நர்சிங் தெரபிஸ்ட் படிப்பு (தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சான்றிதழுக்கு மட்டும்.)
16. பல் அறுவை சிகிச்சை நிபுணர்
பதவி: பல் அறுவை சிகிச்சை நிபுணர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.40,000
கல்வித் தகுதி:
- இந்திய பல் மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு/அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட BDS தகுதி.
விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய விவரங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.08.2026 காலை 10.00 மணி முதல் 9.09.2026 மாலை 05.00 மணி வரை நேரிலோ/விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
- கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயற்செயலர்/மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
05 பீச் ரோடு,
கடலுார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..