TNCPCL Recruitment 2026: மத்திய அரசு நிறுவனத்தில் வேலைபார்க்க ஆசையா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (Chennai Petroleum Corporation Limited - CPCL) நிறுவனத்தில் இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant - JEA-IV) பணியிடங்களுக்கு 60 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு நிறுவனத்தில் பணி செய்ய விரும்பும் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி வேதியியல் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் சம்பள வரம்பு மாதம் ₹25,000 முதல் ₹1,05,000 ஆகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2026 முதல் 11.09.2026 வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
| அம்சம் | விவரம் |
| நிறுவனம் | Chennai Petroleum Corporation Limited |
| அறிவிப்பு எண் | 01 of 2026 – CPCL / HRD:03:055 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 60 |
| பணியிடம் | சென்னை |
| விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள் | 14.08.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 11.09.2026 |
பதவியின் பெயர்: இளநிலை பொறியியல் உதவியாளர்
காலியிடங்கள்: 60
மாத சம்பளம்: ரூ.25,000 - ரூ.1,05,000
கல்வித் தகுதி: டிப்ளமோ அல்லது பி.எஸ்சி வேதியியல்
அனுபவம்: 3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு விவரங்கள்:
SC / ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS): 10 ஆண்டுகள்
PwBD (SC / ST): 15 ஆண்டுகள்
PwBD (OBC): 13 ஆண்டுகள்
Ex-Servicemen: அரசு விதிமுறைகளின்படி
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைச் சரியாக பூர்த்தி செய்வதையும், தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைப்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளவும்.