SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

United India Insurance நிறுவனத்தில் வேலை: டிகிரி போதும், ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

UIIC AO Recruitment 2026: UIIC காலியிடங்களுக்கான பதிவு செயல்முறை செப்டம்பர் 8 அன்று தொடங்கி செப்டம்பர் 28, 2026 அன்று முடிவடையும். இதற்கான தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களைப் பற்றி இங்கே காணலாம்.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 08, 2026, 11:09 IST | Updated: Sep 08, 2026, 11:16 IST
Image Credit: UIIC AO Recruitment 2026 (Representative Photo)
Join

UIIC AO Recruitment 2026: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (United India Insurance Company Ltd - UIIC) நிறுவனம் நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் UIIC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான uiic.co.in மூலம் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் நிறுவனத்தில் 225 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

UIIC AO Recruitment 2026: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC)
அறிவிக்கை எண்HO:HRM:REC:AO:1:2026
வகைமத்திய அரசு வேலை
பணி வகைநிரந்தர வேலை
பதவிAdministrative Officers
காலியிடங்கள்225
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள்08.09.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்28.09.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

UIIC காலியிடங்களுக்கான பதிவு செயல்முறை செப்டம்பர் 8 அன்று தொடங்கி செப்டம்பர் 28, 2026 அன்று முடிவடையும். இதற்கான தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களைப் பற்றி இங்கே காணலாம்.

UIIC AO Recruitment 2026: காலியிட விவரங்கள்

UIIC AO Recruitment 2026: தகுதி வரம்புகள்

நிர்வாக அதிகாரி – ஜெனரலிஸ்ட் (Generalists):

நிர்வாக அதிகாரி – இந்தி அதிகாரிகள்:

மேலும் படிக்க | TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. முழு விவரம்

UIIC AO Recruitment 2026: வயது வரம்பு

UIIC AO Recruitment 2026: விண்ணப்பக் கட்டணம்

மேலும் படிக்க | கோவை மாவட்ட வேலைவாய்ப்பு : 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்

UIIC AO Recruitment 2026: தேர்வு செயல்முறை

தேர்வு செயல்முறையின் பின்வரும் இரு தேர்வுகள் அடங்கும்:

முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் விவரிப்புத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், இறுதித் தேர்வுக்கு முந்தைய கட்டமான நேர்காணலுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள்.

முதற்கட்டத் தேர்வு 100 மதிப்பெண்களைக் கொண்டது, இதில் 100 கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வு 1 மணிநேரம் நடைபெறும். வினாத்தாள் ஆங்கில மொழித் திறன், பகுத்தறியும் திறன் (Reasoning) மற்றும் எண் கணிதத் திறன் (Quantitative Aptitude) ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பகுதியிலும்/தேர்விலும் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற வேண்டும். அத்துடன், நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ள ஒட்டுமொத்தக் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களையும் பெற வேண்டும்.

UIIC AO Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை

  1. இதற்கு முதலில் UIIC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் இருக்கும் 'Recruitment' பகுதியை கிளிக் செய்யவும்.
  3. அதன் பிறகு “Administrative Officers (Scale I) – Generalists and Hindi Officers – 2026” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  4. அதற்குப் பிறகு Click Here for New Registration / Apply Online என்பதை கிளிக் செய்ய வேண்டு.
  5. அடுத்ததாக விண்னப்பதாரர்கள் தங்கள் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  6. பதிவு முடிந்த பிறகு, லாக் இன் செய்து, கல்வித் தகுதி, முகவரி மற்றும் மற்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
  7. அதன் பின்னர் தேவையான அனைத்து ஆவணங்களையும் அப்லோட் செய்ய வேண்டும்.
  8. நீங்கள் விண்ணப்பிக்கும் கேடகரிக்கும் ஏற்ற விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  9. அதன் பிறகு அனைத்து தகவல்களையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து பின் சப்மிட் செய்யவும்.
  10. பின், விண்ணப்ப படிவத்தை பிரிண்ட எடுத்துக்கொள்ளவும், அல்லது PDF ஆக சேவ் செய்து வைத்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க | டிகிரி படித்தவரா? கிராம வங்கியில் 464 காலிப் பணியிடங்கள்.. மாதம் ரூ.80,000 சம்பளம்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES