• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 11 நிலையங்கள், 15 ரயில்கள்... டிக்கெட் விலை விவரம் இதோ

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 11 நிலையங்கள், 15 ரயில்கள்... டிக்கெட் விலை விவரம் இதோ

Poonamalle Bypass - Vadapalani Metro: பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி வரையிலான மெட்ரோவை பிரதமர் மோடி நாளை (அக். 11) திறந்து வைக்கிறார். இதற்கான டிக்கெட் விலை உள்ளிட்ட பிற விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 10, 2026, 01:00 PM IST|Updated: Oct 10, 2026, 01:21 PM IST
joinshare
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 11 நிலையங்கள், 15 ரயில்கள்... டிக்கெட் விலை விவரம் இதோ
Image Credit: Poonamalle Bypass _ Vadapalani Metro | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

பழைய கடனைப் புதுப்பித்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? கூட்டுறவு வங்கியின் புதிய விதிகள் சொல்வது என்ன?

3

DLC: ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே IPPB மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?

4

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!

5

பயிற்சியாளரை கழட்டிவிட்ட CSK... அதிரடி மாற்றம் - 15 வருட உறவு முறிந்தது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Poonamalle Bypass - Vadapalani Metro: சென்னை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி மெட்ரோ வழித்தடம் நாளை (அக். 11) மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. பிரதமர் மோடி நாளை இந்த மெட்ரோ வழித்தடத்தை திறந்துவைக்கிறார்.

திறப்பு விழாவை ஒட்டி பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் விஜய் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க | பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

11 மெட்ரோ நிலையங்கள்

சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்டத்தில் நான்காவது வழித்தடமான (மஞ்சள் லைன்) பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மொத்தம் 26.1 கி.மீ., தூரம் கொண்டது. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி வரை, அதாவது 14.64 கி.மீ., தூரம் கொண்ட மெட்ரோ வழித்தடம்தான் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி வரை மொத்தம் 17 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேல்மட்ட மெட்ரோ நிலையங்கள் ஆகும். ஆனால், தற்போது பூந்தமல்லி பைபாஸ் - போரூர் வரை உள்ள 11 நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட உள்ளன.

போரூர் - வடபழனி இடையே நிற்காது

போரூர் டூ வடபழனி இடையே அதாவது, இரட்டை அடுக்கு பகுதியில் உள்ள ஆறு நிலையங்களை மெட்ரோ ரயில்கள் நிற்காமல் கடந்து செல்லும், அவை பின்னர் செயல்பாட்டுக்கு வரும்.

மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கடந்த பிப்ரவரி மாதமே அனுமதி வழங்கிவிட்ட நிலையில், ரயிலின் வேகம் மற்றும் ரயில்கள் இயக்கப்பட வேண்டிய இடைவெளி குறித்த இறுதி ஒப்புதல்களும் மே மாதமே கிடைத்துவிட்டன.

மேலும் படிக்க | சென்னையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கெல்லாம் தெரியுமா? அதிரடி அறிவிப்பு

10 நிமிட இடைவேளையில் மெட்ரோ

பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி வழித்தடத்திற்கான டிக்கெட் விவரங்களும் சென்னை மெட்ரோவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 15 ரயில்கள் இங்கு இயக்கப்பட உள்ளது.

டிக்கெட் விலை விவரம்

  • பூந்தமல்லி பைபாஸ் முதல் பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை 10 ரூபாய் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் பூந்தமல்லி பைபாஸில் இருந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுபாக்கம் ஆகிய நிலையங்களுக்கு 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல், பூந்தமல்லி பைபாஸ் முதல் ஐயப்பதாங்கல் - போரூர் வரை 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்து பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி இடையே 40 ரூபாய் வசூலிக்கப்படும்.
  • அங்கிருந்து நீங்கள் மெட்ரோவின் முதல் கட்ட வழித்தடத்திற்கு செல்ல 50 ரூபாய் வசூலிக்கப்படும்.

பயணிகள் விரைவாக செல்லலாம்

  • பூந்தமல்லி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பத்தாங்கல், போரூர் பகுதிகளில் இருந்து சென்னை மாநகருக்குள் வந்து செல்பவர்களுக்கு இது சிறந்த போக்குவரத்தாக அமையும்.
  • சாலையில் கடும் போக்குவரத்துக்கு மத்தியில் செல்வதை தவிர்த்து, விரைவாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்று சேரலாம்.
  • வடபழனியில் ஏற்கெனவே மெட்ரோ முதல் கட்டத்தின் பச்சை வழித்தடம் செயல்பட்டு வருவதால் அங்கு இறங்கி நகரின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
  • அங்கிருந்து பரங்கிமலை மெட்ரோ நிலையத்திற்கு செல்லும்பட்சத்தில் புறநகர் ரயில் சேவையையும், பறக்கும் ரயில் சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai