• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /புதிய தலைமைச் செயலகத்திற்கு குவியும் கண்டனங்கள்... அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்...?

புதிய தலைமைச் செயலகத்திற்கு குவியும் கண்டனங்கள்... அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்...?

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. திமுக, அதிமுக மட்டுமின்றி தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கூட கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அரசியல் கட்சியினரின் நிலைப்பாட்டை அறிய இத்தொகுப்பில் காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 11, 2026, 01:44 PM IST|Updated: Sep 11, 2026, 01:58 PM IST
joinshare
புதிய தலைமைச் செயலகத்திற்கு குவியும் கண்டனங்கள்... அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்...?
Image Credit: Tamil Nadu New Secretariat | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu New Secretariat: புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அடுத்தகட்ட பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சட்டப்பேரவை உடன் கூடிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சென்னையில் இடத்தை தேர்வு செய்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில்  உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட துறைகள், அமைப்புகளுக்கு சொந்தமான இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,200 கோடி மதிப்பில் 15 மாடிகள் கொண்ட புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட அனுமதி பெறும் நடவடிக்கைகளும் வேகம் எடுத்துள்ளன. இந்தச் சூழலில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மேலும் படிக்க | Explained: பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! CM விஜய் முடிவால் தலைவலி.. பாதிப்புகள் இவ்வளவா?

அதிமுக

  • இத்திட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதி என இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர் என்றும் நினைவுக்கூர்ந்துள்ளனர்.
  • விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி 1,200 கோடி ரூபாய் செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என்றும் விமர்சித்துள்ளார்.
  • புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை என்றும்; தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
  • தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது என்றும்; எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்யை கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.

இடநெருக்கடி, வாகனப்… pic.twitter.com/yVWzfA6Aog

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 11, 2026

மேலும் படிக்க | BRICS Summit 2026: இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின்: இன்று பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

திமுக

  • தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் புதிய தலைமைச் செயலகம் அமைவதை விமர்சித்துள்ளார்.
  • அதில் அவர், "தற்போது இருக்கும் தலைமைச் செயலகத்தில் தவெகவினர் தங்களின் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன் பின்னர் புதிய சட்டப்பேரவை குறித்து யோசிக்கலாம்.
  • தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென்று நினைத்தால், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டடத்தையே பயன்படுத்தலாம். தற்போது அது மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருந்தாலும் தலைமை செயலகத்திற்கு என கட்டப்பட்ட இடம் என்பதால் அதை மீண்டும் பயன்படுத்தலாம்" என குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு

திமுக, அதிமுக மட்டுமின்றி பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அதிலும் தவெக ஆட்சி அமைய ஆதரவளித்த சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரததை பாதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "தலைமைச் செயலக கட்டுமானம் நீண்டநாட்களுக்கானது. அதனை அவசரகதியில் செய்யக்கூடாது. அனைவரும் ஏற்கக் கூடிய ஒரு இடத்தை தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்ய வேண்டும். ஒருமித்த கருத்தை எட்டும் வரை தற்போது தேர்வு செய்த இடத்தில் கட்டுமான பணி கூடாது. புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பட்டினப்பாக்கம் மீனவர்களின் கோரிக்கைகளை தவெக அரசு கேட்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி X பதிவு

நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கூடாது: சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும்! @CMOTamilnadu pic.twitter.com/MgycFK08hL

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 9, 2026

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் X பதிவு

நாடாளுமன்றமே ₹900 கோடி; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? - துக்ளக் தர்பார் திட்டத்தை உடனே திரும்பப் பெறுக!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற @TVKPartyHQ அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு…

— Nainar Nagenthran (@NainarBJP) September 10, 2026

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் X பதிவு

சென்னை பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்!

புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச்…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 9, 2026

மேலும் படிக்க | சொந்த தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu