சென்னை முருகன் கோவில்களுக்கு ஒருநாள் டூர்... தமிழக அரசு அறிவிப்பு
சென்னையை சுற்றியிருக்கும் முருகன் திருக்கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. வடசென்னை மற்றும் தென் சென்னை என தலா 5 கோவில்களில் தனித்தனியாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TTDC Spiritual Tour Packages, Chennai: கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி படையெடுப்பார்கள். இந்நிலையில், சென்னையை சுற்றியிருக்கும் முருகன் திருக்கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறைக்கு கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆன்மீக சுற்றுலா மட்டுமின்றி கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, சூழலியல் சார்ந்த சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து சுற்றுலா பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வார்கள்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு... தமிழ்நாடு அரசின் தஞ்சாவூர் ஸ்பெஷல் டூர்!
முருகன் கோவிலுக்கு ஆன்மீகச் சுற்றுலா
அந்த வகையில், சென்னையை சுற்றியிருக்கும் திருக்கோவில்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, இரண்டு சுற்றுலா திட்டங்களை வகுத்துள்ளது. வடசென்னையில் 5 கோவில்கள், தென் சென்னையில் 5 கோவில்கள் என சுற்றுலா தனித்தனியாக அழைத்துச் செல்லப்படுகிறது. அவற்றை இங்கு காணலாம்.
சென்னை முருகன் கோவில் சுற்றுலா - 1 (வடசென்னை)
- காலை 7 மணி: திருவல்லிக்கேணியில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா பேருந்து புறப்பாடு, கந்தக்கோட்டம் கோவிலுக்கு செல்லலாம்.
- காலை 7.15 - காலை 8.35: கந்தகோட்டம் கந்தசாமி கோவிலில் தரிசனம்
- காலை 8.35 - காலை 9.40: மின்ட் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தரிசனம்.
- காலை 11.20 - மதியம் 12: சிறுவாபுரி பாலமுருகன் கோவிலில் தரிசனம்.
- மதியம் 1.30 - மதியம் 2.30: மதிய உணவை அருந்தலாம்.
- மதியம் 2.30 - மாலை 4.30: வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று, அங்கு தரிசனம் செய்யலாம்.
- மாலை 5.30 - மாலை 6: தேனாம்பேட்டை பாலசுப்ரமணி கோவிலில் தரிசனம்.
- இரவு 7: திருவல்லிக்கேணி நோக்கி புறப்பாடு.
- இரவு 8: திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்திற்கு வந்தடைந்து, சுற்றுலா நிறைவடையும்.
சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் தேதிகள்: நவம்பர் 15, 17, 21, 22, 24, 28, 29; டிசம்பர் 1, 5, 6, 8, 12, 13, 15.
சுற்றுலா கட்டணம்: ரூ.1,200
சென்னை முருகன் கோவில் சுற்றுலா - 2 (தென் சென்னை)
- காலை 7 மணி: திருவல்லிக்கேணியில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா பேருந்து புறப்படும். இந்த சுற்றுலா திட்டத்தில் தென் சென்னை பகுதியில் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். முதலில் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு செல்வீர்கள்.
- காலை 9.20 - காலை 10.20: வல்லிக்கோட்டை முருகன் கோவிலில் தரிசனம். அங்கிருந்து குன்றத்தூர் கோவிலுக்கு புறப்பாடு.
- காலை 11.20 - மதியம் 12: குன்றத்தூர் முருகன் கோவிலில் தரிசனம்.
- மதியம் 1.30 - மதியம் 2.30: மதிய உணவு அருந்தலாம்.
- மதியம் 2.30 - மாலை 4.30: திருப்போரூர் முருகன் கோவிலில் தரிசனம்.
- மாலை 5.50 - மாலை 6.30: திருவான்மியூர் அறுப்படை வீடு முருகன் கோவிலில் தரிசனம்.
- மாலை 6.40 - இரவு 7 மணி: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் தரிசனம்
- இரவு 7: திருவல்லிக்கேணி நோக்கி புறப்பாடு.
- இரவு 8: மீண்டும் பேருந்து திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்திற்கு வந்தடைந்து, சுற்றுலா நிறைவடையும்.
சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் தேதிகள்: நவம்பர் 15, 17, 21, 22, 24, 28, 29; டிசம்பர் 1, 5, 6, 8, 12, 13, 15.
சுற்றுலா கட்டணம்: ரூ.1,000
மேலும் விவரங்களுக்கு...
முன்பதிவு செய்ய இணையதள முகவரி: www.ttdcbooking.com
தொடர்பு எண்: 1800 - 4253 1111, 044- 25333333, 75500 63121
மின்னஞ்சல்: sales@ttdconline.com