பண்டிகையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு..முழு விவரம்
சில நாட்களில், பூஜை பண்டிகைகள் வரவிருப்பதை அடுத்து, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
பூஜை பண்டிகைகள் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு பயணிப்பவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க தெற்கு ரயில்வே பல்வேறு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. குறிப்பாக, சென்னை, தாம்பரம், போத்தனூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சாத்ராகாச்சி மற்றும் திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு இந்த புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
சாத்ராகாச்சி சிறப்பு ரயில்கள் : போத்தானூர் மற்றும் தாம்பரம் வழித்தடத்தில்..
வெளியூர் செல்வதற்கு, பண்டிகை காலத்தில் பயணிகள் தயாராக இருப்பார்கள். அவர்களின் வசதிகாக தற்போது தெற்கு ரயில்வே இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது.
போத்தானூர் சிறப்பு ரயில் (06139/06140) போத்தானூரில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதி, காலை 6.15 மணிக்கு 06139 ரயில் போத்தானூருக்கு அன்றைய தினமே இரவு 18.30 மணிக்கு சென்று சேர்ந்து விடும். அதே போல, இன்னொரு சிறப்பு ரயிலான 06140 ரயில், போத்தானூருக்கு அன்றைய தினம் இரவு 18.30 மணிக்கு சென்று சேர்ந்து விடும்.
ரயில் சிறப்பம்சங்கள் : இந்த ரயிலில் 18 சேர் கார் பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான நட்பு பெட்டி மற்றும் 1 லக்கேஜ் பெட்டி இணைக்கப்பட்டிருக்கின்றன.
திருவனந்தபுரம் - சாத்ராகாச்சி மற்றும் பெங்களூரு சிறப்பு ரயில்கள்:
தென் மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன:
திருவனந்தபுரம் வடக்கு - சாத்ராகாச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06105/06106)
திருவனந்தபுரம் வடக்கிலிருந்து அக்டோபர் 15ஆம் தேதியன்று மதியம் 14.15 மணிக்கு புறப்படும் ரயிலான 06105 அக்டோபர் 17ஆம் தேதியன்று மதியம் 13.45 மணிக்கு சாத்ராகாச்சி சென்றடைகிறது.
அக்டோபர் 18ஆம் தேதியன்று மதியம் 14.15 மணிக்கு புறப்படும் ரயிலான 06106 அக்டோபர் 20ஆம் தேதி, காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்குக்கு வந்தடையும்.
இந்த ரயில், கொல்லம், கோட்டயம், எர்ணாகுலம் டவுன், த்ரிசூர், பாலக்காடு, சேலம், போதனூர், காட்பாடி, விஜயவாடா உள்ளிட்ட சந்திப்புகளில் நின்று செல்லும்.
திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் (06575/06567) - பெங்களூரு கண்டோன்மெண்ட் - திருவனந்தபுரம் வடக்கு:
அக்டோபர் 16ஆம் தேதியன்று, மாலை 16.40 மணிக்கு 06575 சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில், மறுநாள் காலை 10.30க்கு திருவனந்தபுரம் வடக்கிற்கு வந்தடையும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
பண்டிகைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரயில்வே துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகளும் தெற்கு ரயில்வே தரப்பிலிருந்தே தொடங்கும்.
ஒவ்வொரு ரயிலிலும், பயணிகளின் தேவையை பொறுத்து ஏசி பெட்டிகள், ஸ்லீப்பர் பெட்டிகள், பொது, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நட்பு பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கின்றன.
தெற்கு ரயில்வே, பூஜை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் பயணிகளுக்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள், முன்கூட்டியே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | நவராத்திரிக்கு 4 நாட்கள் விடுமுறை... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - அட்டவணை வெளியீடு