நவராத்திரிக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருக்கும் வேளையில், வட மாநிலங்களுக்கு பயணிப்பவர்களுக்கு என சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிவரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருக்கும் சூழலில், தமிழ்நாடு - மேற்கு வங்கம் செல்லும் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை
நவராத்திரி அக். 11ஆம் தேதிமுதல் அக். 20ஆம் தேதிவரை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வரும் அக். 19, அக். 20 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறையாகும். இதனால், அக். 17, 18 வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாகும்.
2/5
சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு
நவராத்திரி என்பது தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இதனால், பல வடமாநிலத்தவர்களும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வார்கள், வெளி மாநிலத்தில் இருப்போரும் தமிழ்நாட்டுக்கு வருகை தருவார்கள். அந்த வகையில், கோவை மாவட்டம் போத்தனூர் - மேற்கு வங்கம் கரக்பூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
3/5
போத்தனூர் - கரக்பூர்
போத்தனூர் - கரக்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 06149) அக்டோபர் 14 (புதன்) காலை 7.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (வியாழன்) இரவு 8 மணிக்கு கரக்பூர் சென்றடையும். தமிழ்நாட்டில் இருந்து நவராத்திரி விடுமுறைக்கு வட மாநிலங்களுக்கு பயணிப்பவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
4/5
கரக்பூர் - சென்னை எழும்பூர்
கரக்பூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்ச 06150) அக்டோபர் 15ஆம் தேதி (வியாழன்) இரவு 11 மணிக்கு கரக்பூரில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை (அக். 17) காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
5/5
எங்கெல்லாம் இந்த ரயில் நிற்கும்?
போத்தனூர் - கரக்பூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் இந்த ரயில்களில் 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன்கள் இருக்கும். இந்த ரயில்கள் தமிழ்நாட்டின் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி; ஆந்திராவின் ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா, விஜயநகரம், பலாசா; ஓடிசா மாநிலத்தின் குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பத்ரக், பாலாசோர், கரக்பூர் ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.