வழக்கமாக, பெண்கள் திருமணம் ஆனதற்கு பிறகும், குழந்தை பெற்றதற்கு பிறகும் எடை கூடுவது வழக்கம். அப்படி, சமீபத்தில் குழந்தை பிறந்த பிறகு எடை போட்டவர் கத்ரீனா கைஃப். இவர் சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது, அவருடைய உடல் தோற்றத்தை பலரும் பாடி ஷேமிங் செய்தனர். கத்ரீனா கைஃப், பாலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். இவர் வெறும் நடிகை மட்டும் கிடையாது. இவர், இந்தியாவின் பெண் தொழிலதிபர்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.
கத்ரீனாவும் விக்கி கௌஷலும் 2021ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விஹான் என பெயரிடப்பட்டது.
கத்ரீனா கைஃப், சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல பேர், அவரது முந்தைய தோற்றத்தையும், தற்போதைய தோற்றத்தையும் ஒப்பிட்டு பல மோசமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், “திருமணத்திற்கு முன்பிருந்த கத்ரீனா எங்கே?” என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், அவரது உடல் எடை கூடிவிட்டதால் அவருடைய திரையுலக வாழ்க்கையே முடிந்து விட்டது என்று கூறி வருகின்றனர். அந்த கருத்துகள் தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
கத்ரீனா கைஃப்பை இப்படி உருவ கேலி செய்வதை பல பெண் இன்ஃப்ளூவன்ஸர்கள் விமர்சித்து வருகின்றனர். அவர்கள், ஒரு பெண், தாய்மை அடைந்து, தன்னுடைய உடலை நேசிப்பதை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆரோக்கியமான தாய்மையை ஏற்றுக்கொண்டு, பொது வெளியில் தோன்றும் கத்ரீனா பல கோடி பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார் என கூறி வருகின்றனர்.
நிதி நாளிதழ் ஒன்று, சமீபத்தில் கத்ரீனாவின் வணிக வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அவருடைய Kay Beauty எனும் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பட்டியலிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு நிதியாண்டில், ரூ.240 கோடியிலிருந்து 2026ல் ரூ.350 கோடி வரை அதிகரித்திருக்கிறதாம். இது, சுமார் 46% வரை அதிகரித்திருக்கிறதாம்.
இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், தற்போது இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகளிலும் கூட இவருடைய நிறுவனம் விரிவாக்கம் அடைந்திருக்கிறது. கத்ரீனா, இதில் வெறும் விளம்பர தூதுவர் மட்டும் கிடையாது. அதன் தயாரிப்பின் தரத்திற்கும் உருவாக்கத்திற்கும் நேரடி பங்களிப்பை கொடுக்கிறார்.