ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியிருக்கும் வடிவேலு..உள்ளே என்னென்ன இருக்கு தெரியுமா?
பிரபல காமெடி நடிகரான வடிவேலு, சமீபத்தில் பல கோடி செலவில் வீடு கட்டியிருக்கிறார். இந்த சமயத்தில், அந்த வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் ரசிகர்களால், ‘வைகை புயல்’ என அழைக்கப்படுபவர், வடிவேலு. தன் நகைச்சுவை, உடல் மொழி மற்றும் உடல் பாவனைகளால் பலரை சிரிக்க வைத்த இவர், சில ஆண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். இவர் நடிப்பில் இன்னும் சில திரைப்படங்கள் ரிலீஸாக இருக்கும் சமயத்தில், அவர் கட்டியிருக்கு புது வீடு குறித்து பலரும் பேசி வருகின்றனர். இது குறித்த முழு விவரம், இதோ.
மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலு!
நடிகர் வடிவேலுவின் சினிமாவிற்கும், அவருடைய நடிப்பிற்கும், பல ரசிகர்கள் இருந்தாலும், இயல்பு வாழ்க்கையில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பெரும்பாலானோர் ஆதரிப்பதில்லை. குறிப்பாக, 2011ஆம் ஆண்டு தேர்தலில், திமுக கட்சிக்கு ஆதரவாக வடிவேலு குரல் கொடுத்த போது, அவர் தேமுதிக நிறுவனரான விஜயகாந்தை மரியாதை குறைவாக கடுமையாக பேசியது பலர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே போல, திரையுலகில் அவர் செய்த சில செயல்பாடுகள் காரணமாக, அவருக்கு வந்த பட வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது.
2018ஆம் ஆண்டு, இம்சை அரசன் 24ஆம் புலிக்கேசி படத்திலிருந்து விலகிய காரணத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தினால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பல ஆண்டுகள் திரையுலகில் தலைக்காட்டாமல் இருந்தார்.
வடிவேலுவுக்கு, கம்-பேக் படமாக ‘மாமன்னன்’ படம் கருதப்பட்டது. அதில் அவரது கதாப்பாத்திரம் மிகவும் அழுத்தமான ஒன்றாக எழுதப்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது. இதையடுத்து தொடர்ந்து, சந்திரமுகி 2, மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்த சமயத்தில்தான், சுமார் 100 கோடி செலவில் ஒரு வீட்டை அவர் கட்டியிருக்கிறார்.
வடிவேலு கட்டிய வீடு!
நடிகர் வடிவேலு, பழங்கால முறையில் திண்ணை வைத்து வீடு கட்டியிருக்கிறார். நவீன முறையில் பலர் வீடு கட்டி வரும் சமயத்தில், அவர் இப்படி பழங்கால முறையில் வீடு கட்டியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீட்டில், சிறிய அளவில் ஒரு பிள்ளையார் சிலையை அவர் வைத்திருக்கிறாராம். அதே போல, மேலும் சப்போட்டா, வாழை நெல்லிக்காய், தென்னை, பலா உள்ளிட்ட மரங்களும் செடிகளும் வளர்க்கப்படுகின்ற்ன. வீட்டை சுற்றி மரங்கள் மற்றும் செடிகள் இடம்பெற்றுள்ளன. இது அந்த வீட்டை சுற்றி இயற்கை சூழலை கொண்டுள்ளது.
வீட்டில் மின்சாரம் போய்விட்டால் இன்வர்ட்டர் வசதி, சிசிடிவி கேமரா, கார் பார்க்கிங் உள்ளிட்டவைகளும் வைக்கப்பட்டுள்ளது. அதே போல, வீட்டிற்குள்ளேயே நடிகர் வடிவேலுவின் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வருபவர்களுக்காகவும் ஒரு இடம் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
வடிவேலு அடுத்தடுத்து நடிக்கும் படங்கள்!
வடிவேலு பேங் பேங் எனும் படத்தில் பிரபு தேவாவுடன் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படம் இது.
அதே போல, மார்ஷல் எனும் படத்திலும் நடிக்கிறார். முதன்முறையாக தனுஷுடன் சேர்ந்து தனுஷின் 56வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூடவே, சமுத்திரகனியுடனும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | அனிருத்-காவ்யா திருமணம்! பவர்ஃபுல் உறவினர்கள் ஆகும் ரஜினிகாந்த்-மு.க.ஸ்டாலின்...