கமல்ஹாசனுக்கும் எனக்கும் காதலா? சேச்சே...அப்படி பேசாதீங்க! பிரபல நடிகை பேட்டி..
தமிழ் திரையுலகில், முக்கிய மற்றும் மூத்த நடிகராக இருக்கிறார், கமல்ஹாசன். இவருக்கும், இன்னொரு பிரபல நடிகைக்கும் காதல் என அந்த சமயத்தில் சர்ச்சைகள் வலம் வந்தன. அதற்கு அந்த நடிகை இப்போது பதில் அளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில், பல்வேறு காதல் கதைகளுக்கு பெயர் போன ஹீரோவாக இருந்தவர், கமல்ஹாசன். அவருடன் எந்த ஹீரோயின் நடித்தாலும், அந்த காலத்து பத்திரிகைகள் அவர்கள் இருவரையும் வைத்து பேச ஆரம்பித்து விடும். கமல்ஹாசனும், தான் யாருடன் உறவில் இருந்தாலும் அது குறித்து வெளிப்படையாக பேசும் ஒருவராக இருந்து வந்தார். இந்த சமயத்தில், கமலுடன் காதல் சர்ச்சையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிய நடிகை தற்போது அது குறித்து பேசி இருக்கிறார்.
கமலுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய ஜெயசுதா..!
தென்னிந்திய திரையுலகில் முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர்தான் ஜெயசுதா. ஹீரோயினாக நடிப்பதை நிறுத்திய பிறகு, தெலுங்கு திரைப்படங்களில் அண்ணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இப்போது தாயார் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.
இவர் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கமல்ஹாசன் குறித்த பேச்சும் அடிப்பட்டது.
கமலுடன் உறவா?
ஜெய சுதாவும் கமலும் தெலுங்கில் ஒரு படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொண்டதாக ஒரு செய்தி வெளியானது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூட செய்திகள் பரவியது. இது குறித்து ஜெய சுதாவிடம் மீண்டும் கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்வியை கேட்டவுடன் குபீரென சிரித்த ஜெய சுதா, இதற்கான விளக்கத்தையும் அளித்தார். தங்களுக்குள் எந்த காதல் அல்லது அதன் தொடர்புடைய எந்த உறவும் இல்லை என்று கூறிய அவர், தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறினார். இதனால், பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த காதல் வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியை கேட்ட போது ஜெயசுதா, அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்த சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கமலின் காதல் உறவுகள்..
கமல்ஹாசன் நடிகை ஸ்ரீவித்யாவை உயிருக்கு உயிராய் காதலித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதற்கு ஸ்ரீவித்யாவின் தாயார் ஒப்புகொள்ளாததால் இருவராலும் சேர முடியாமல் போனது.
கமல்ஹாசன், 1978ல் வானி கணபதியை திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம், 1988ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது. 10 ஆண்டுகள் நீடித்த இவர்களின் திருமணத்தில், இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.
கமல்ஹாசன், இரண்டாவதாக சரிகாவை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 1988ஆம் ஆண்டு நடந்தது. சரிகாவும் ஒரு நடிகை ஆவார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் செட் ஆகாததால் 2002ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து, 2004ஆம் ஆண்டி பிரிந்து விட்டனர்.
கமல்ஹாசன், 2005ஆம் ஆண்டு முதல் நடிகை கௌதமியுடன் காதல் மற்றும் லிவ் இன் உறவில் இருந்தார். 10 வருடத்திற்கும் மேல் காதலித்த இவர்கள், 2016ஆம் ஆண்டில் பிரிந்தனர். இவர்கள் இருவரும் தங்களின் காதலை வெளப்படையாக அறிவிக்கவும் இல்லை, தங்கள் பிரிவையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ராமாயணா திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போ? இதோ வந்துருச்சு அப்டேட்..