• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /“விவாகரத்து ஆனாலும் நீ என் மகள்” Ex மருமகள் மீது பாசத்தை காெட்டும் ஜி.வி.பிரகாஷின் தாய்!

“விவாகரத்து ஆனாலும் நீ என் மகள்” Ex மருமகள் மீது பாசத்தை காெட்டும் ஜி.வி.பிரகாஷின் தாய்!

சமீபத்தில், பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷின் தாயார் பேசிய போது சைந்தவி தனக்கு இன்னும் மகள் போன்ற ஒருவர் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 13, 2026, 11:44 AM IST|Updated: Nov 13, 2026, 11:54 AM IST
joinshare
“விவாகரத்து ஆனாலும் நீ என் மகள்” Ex மருமகள் மீது பாசத்தை காெட்டும் ஜி.வி.பிரகாஷின் தாய்!
Image Credit: Saindhavi | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் திரை இசையுலகின் முன்னணி இசையமைப்பாளராகவும், பல படங்களில் நடித்த ஹீரோவாகவும் இருக்கிறார், ஜி.வி.பிரகாஷ். இவரும் சைந்தவியும் சிறு வயதிலிருந்தே நட்புடன் இருந்து பின்னர் காதலித்து திருமணம் செய்து  கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து:

ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய சிறு வயதில் இருக்கும் போதே இசைத்துறையில் கால் பதித்து விட்டார். இதனாலேயே இவர் இசையமைத்த முதல் படமான வெயில் சூப்பர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து குசேலன், பொல்லாதவன், கிரீடம், தலைவா என பல படங்களில் இசையமைத்துள்ளார்.

இன்னொரு பக்கம் பாடகி சைந்தவியும் வேகமாக வளர்ந்து வந்தார். இவர், ஜிவி பிரகாஷ் இசையில் பல்வேறு பாடல்களை பாடியிருக்கிறார். சொல்லப்போனால் இருவரும் சேர்ந்து பாடிய பல பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன.

சைந்தவியும் ஜிவி பிரகாஷும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். இதையடுத்து இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருக்கும் 2013ஆம் ஆண்டு திருமணமும் நடந்தது. ஆனால், அவர்கள் திருமணம் பலரும் நினைத்த அளவிற்கு பல ஆண்டுகள் நீடிக்கவில்லை. ஜிவி பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் 2020ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தார். இவருக்கு அன்வி என்று பெயர் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | முதல்வர் விஜய் நடித்த சூப்பர் ஹிட் ‘பைரவா’ படம் ரீ-ரிலீஸ்! எப்போ தெரியுமா?

பிரிந்தாலும் குழந்தைக்காக கோ-பேரண்டிங்!

ஜிவி பிரகாஷ்-சைந்தவி இருவரும் சில நாட்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, தாங்கள் விவாகரத்து பெறுவதாக இருவரும் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அறிவித்தனர். இந்த பிரிவு பரஸ்பர புரிதலுடன் நடந்ததாக தெரிவித்த இவர்கள், மன அமைதிக்காக இந்த முடிவை எடுத்ததாக கூறினர்.

கணவன் மனைவியாக இருவரும் பிரிந்து விட்டாலும், தங்களின் மகள் அன்வியின் விஷயத்தில் இருவரும் ஒன்றாகவே செயல்பட்டு வருகின்றனர். இருவரும் தங்கள் மகளை கோ பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர். அவரும், சில நாட்கள் ஜி.வி பிரகாஷ் உடன் அவர் வீட்டிலும்,  சில நாட்கள் சைந்தவி வீட்டிலும் வளர்கிறார்.

விவாகரத்து ஆனாலும் என் மகள்தான்..

சைந்தவியின் முன்னாள் மாமியார், அதாவது ஜிவி பிரகாஷ் குமாரின் தாயாரான ரைஹானா சமீபத்தில் பேசியிருக்கிறார். ரைஹானா ஒரு தனியார் சேனலூக்காக இசைத்துறையை சேர்ந்த பலரை பேட்டியெடுத்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானோடு சேர்ந்து பணியாற்றிய இயக்குநர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்டோரை பேட்டி எடுத்தார். அதன் ஒரு பகுதியாக சைந்தவியையும் பேட்டி எடுத்திருந்தார்.

”எத்தனையோ காம்பினேஷன் வந்தாலும் இந்த காம்பினேஷன் ரொம்ப ஸ்பெஷல்” என்று பேச ஆரம்பித்த அவர், தங்களுக்குள்ளான உறவு மாமியார், மருமகள் உறவை தாண்டியது என்றும், எப்போதுமே சைந்தவிக்கு தன் மனதில் சிறப்பான இடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “நீங்கள் என் அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் எப்போதும் என் மகள்தான். என்னுடைய ஒரு ஷோவுக்கு பாடகியை தேடிக்கொண்டிருந்த போது ஜிவிதான் வந்து சைந்தவியை பாட வைக்கலாம் என கூறினார். அப்போதுதான் நான் அவரை முதன் முதலாக பார்த்தேன்” என்று தன் மருமகளை பார்த்தது குறித்து அவர் நினைவு கூர்ந்திருந்தார். தன் மருமகளை அவர் மகள் என்று கூறியது, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | அனிருத்-காவ்யா திருமணத்தில் தாலி கட்டவில்லை..அதற்கு பதில் என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema