• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் ‘மகாராஜா’! விஜய் சேதுபதியாக நடிக்கும் ஆங்கில நடிகர்..யார்?

ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் ‘மகாராஜா’! விஜய் சேதுபதியாக நடிக்கும் ஆங்கில நடிகர்..யார்?

தமிழ் திரைப்படமான மகாராஜா, ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் தெரியுமா? அது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 17, 2026, 12:34 PM IST|Updated: Sep 17, 2026, 12:40 PM IST
joinshare
ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் ‘மகாராஜா’! விஜய் சேதுபதியாக நடிக்கும் ஆங்கில நடிகர்..யார்?
Image Credit: Maharaja Hollywood Remake | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் திரையுலகில், செம ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, மகாராஜா. இந்த படத்தை ஹாலிவுட்டில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

மகாராஜா திரைப்படம்:

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், 2024ல் வெளியான திரைப்படம்தான் மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய தோற்றத்தில் நடித்திருப்பார். அவருடன் சேர்ந்து அனுராக் காஷ்யப், சாச்சனா, மம்தா மோகன் தாஸ், நட்டி, அபிராமி, திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். யாரும் எதிர்பாராத பலவித ட்விஸ்ட்களுக்கு மத்தியில் படம் சுழலும்.

கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு மகாராஜா திரைப்படம் பெரிய பிரேக்கை கொடுத்தது. இந்த பெரு வெற்றியை அடுத்து அவர் பிற சில படங்களிலும் சைன் செய்து நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | மண்ணைக்கவ்விய சர்தார் 2! மண்டாடியின் நிலை என்ன? இதோ வசூல் விவரம்..

ஹாலிவுட்டில் ரீ-மேக்?

வழக்கமாக, ஹாலிவுட்டில் வெளியாகும் படங்களை இன்ஸ்பயரிங் ஆக வைத்துதான் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் படங்கள் உருவாக்கப்படும். தெய்வத்திருமகள், அவ்வை ஷன்முகி என பல படங்களை இதற்கு உதாரணங்களாக சொல்லிக்கொண்டே போகலாம். இம்முறை, தமிழ் படத்தை ஹாலிவுட்டில் ரீ-மேக் செய்ய இருக்கிறார்களாம். ஹாலிவுட்டில், மகாராஜா படத்தை ரீ-மேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய ஹாலிவுட் ஏஜென்ஸி, மகாராஜாவின் ரீ-மேக் உரிமைகளை வாங்கும் விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட்டே ஜாலியாக இருக்கிறது.

விஜய் சேதுபதியாக நடிக்கப்போவது யார்?

மகாராஜா படத்தின் ஹாலிவுட் ரீ-மேக்கில், பிரபல ஹாலிவுட் நடிகரான மேத்யூ மெக்கோனாஹே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த நடிகரான இவர், பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் கிரிஸ்டோபர் நோலனின் ‘Interstellar' திரைப்படம் இவருக்கு பல கோடி ரசிகரகளை தேடி கொடுத்தது. இவருடைய நடிப்பில் உருவான ட்ரூ டிடெக்டிவ் எனும் தொடரும் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒன்றாகும். தி ஜெண்டில்மேன், டாலாஸ் பையர்ஸ் க்ளப், ஹவ் டு லூஸ் அ கய் இன் 10 டேஸ் உள்ளிட்டவை இவர் நடித்த ஹிட் படங்களில் சில ஆகும். இவர்தான், தற்போது மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

கதை என்ன?

சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் ஹிட் அடித்த ‘மகாராஜா’ திரைப்படத்தின் கதை ஒரு ரிவெஞ்ச் த்ரில்லர் ஆகும். இதில், அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் மகாராஜா, ஒரு சலூன் கடையை வைத்துள்ளார். இவர், காவல் நிலையத்தில் தன்னுடைய வீட்டில் இருந்த குப்பைத்தொட்டியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதில் இருந்து படம் ஆரம்பிக்கும். இதில், நல்லசிவம் கதாப்பாத்திரத்தில் வரும் சிங்கம்புலி வில்லனாக இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயத்தில் க்ளைமேக்ஸில் வில்லனுக்கும் மகாராஜாவிற்கும் இருக்கும் ட்விஸ்ட், இன்னும் பெரியது ஆகும். இந்த படம் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டால், கண்டிப்பாக அந்த நாட்டிற்கு ஏற்றார் போல பல மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்த வார ஓடிடி ரிலீஸ்! மொத ராத்திரி to இருமுடி-எதை எந்த தளத்தில் பார்க்கலாம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema