SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விவாகரத்து செய்ய நினைத்தேன்..மனைவி விடல! நடிகர் பிரதீப் ஆண்டனி பரபரப்பு பேச்சு..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், பிரதீப் ஆண்டனி. இவர், சில மாதங்களுக்கு முன்பு தன் மனைவியை பிரிவதாக அறிவித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

Written By Yuvashree M
Published: Nov 19, 2026, 15:35 IST | Updated: Nov 19, 2026, 15:42 IST
Image Credit: Pradeep Antony With His Wife | X Page
Join

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததை அடுத்து, தன் மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக ஒரு பதிவை வெளியிட்டார். இது, பெருமளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிகபாஸ் மூலம் பிரபலமான பிரதீப்!

அதிக தமிழ் ரசிகர்களை கொண்ட தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் 7வது சீசன் வரை தொகுத்து வழங்கி வந்தார். அந்த சீசனில் பல்வேறு முக்கிய போட்டியாளர்கள் இருந்தனர். அப்படி இருந்தவர்களுள் ஒருவர்தான், பிரதிப் ஆண்டனி. இவர், இந்த நிகழ்ச்சி மூலம் ஹீரோவாக பார்க்கப்பட்டதற்கு பெரிய காரணம் இருக்கிறது.

பிரதீப் ஆண்டனி, அருவி, டாடா, வாழ் உள்ளிட்ட சில திரைப்படங்களில்தான் நடித்துள்ளார். இவர், பிரபல நடிகர் கவினின் நண்பர் ஆவார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருந்த போது, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து சக போட்டியாளர்களால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

திருமணம்..குழந்தை!

நடிகர் பிரதீப் ஆண்டனி, தன்னுடைய நீண்ட நாள் காதலியான பூஜா சக்தி என்பவரை 2024 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சென்னையில் மிக எளிய முறையில் நடந்தது. இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் இந்து முறைப்படியும் பின்னர் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது.

பிரதீப் ஆண்டனிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பிரதீப், அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தார்.

விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு!

பிரதீப் ஆண்டனி, சில மாதங்களுக்கு முன்பாக தான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக குறிப்பிட்டார். தன் குழந்தை பிறந்த போது, அதனுடன் தான் ரொம்பவே ஒன்றி விட்டதாக கூறிய அவர், அவனுடன் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் புதிதாய் உணர்ந்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | அரசன் படத்திலிருந்து விலகிய அனிருத்..? வெற்றிமாறன் - சிம்பு சண்டையா..? படம் வருமா வராதா?

பல மாதங்களாக தான் குழந்தையை பார்க்கவே இல்லை என்று தெரிவித்திருந்த அவர், தான் தவறான ஒரு ஆளை திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தான் ஒவ்வொரு நாளும் ரொம்ப கேடு கெட்டவனாக மாறிவருவதாக கூறியதோடு, தன்னுடன் பேச யாரும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்த்த பலரும், பிரதீப் ஆண்டனிக்கு என்ன ஆச்சு என்று கேட்டதாேடு, குழந்தை பெற்றிருக்கும் பெண் மீது இவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கூறியிருந்தனர்.

மனைவி பற்றி பேச்சு..

சமீப காலமாக, நடிகர் பிரதீப் ஆண்டனி, ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரின் ப்ரமோஷனில் கலந்து கொண்ட போது, விவாகரத்து போஸ்ட் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

”நான் பொதுவக் எமோஷனை வெளிப்படுத்தி போஸ்ட் போடுவது இயல்பான ஒன்றுதான். அந்த நேரத்தில் நிதி ரீதியாக ஒரு பிரச்சனை இருந்தது. அப்போது என் மனைவி என்னுடன் நிற்கவில்லை. இந்த கோவத்தால் போஸ்ட் போட்டு விட்டேன். அது பெரிதாக ஆகிவிட்டது. இப்போது அது தீர்ந்து விட்டது. பிரச்சனை எதுவும் இல்லை.

ஆனாலும் வேலை காரணத்தினால் தற்போதைக்கு தனியாக இருக்கிறோம். நான் பிரிந்து விடலாம் என இனைத்தேன். ஆனால், என் மனைவி என்னை ரொம்ப லவ் பண்றா. அவள் என்னை விடுவதற்கு தயாராக இல்லை. அதனால்தான் எங்களால் மீண்டும் சேர முடிந்தது” என்று ஓப்பனாக பேசி இருக்கிறார், பிரதீப் ஆண்டனி.

மேலும் படிக்க | மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு..! அர்ஜுன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..என்ன கூறியுள்ளார்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES