• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் களமிறங்கும் ஜூலி..வைல்ட் கார்டில் சர்ப்ரைஸ்!

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் களமிறங்கும் ஜூலி..வைல்ட் கார்டில் சர்ப்ரைஸ்!

இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி..'Celebrity MasterChef Tamil' நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி.

Written ByYuvashree M
Published: Oct 21, 2026, 06:50 PM IST|Updated: Oct 21, 2026, 06:56 PM IST
joinshare
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் களமிறங்கும் ஜூலி..வைல்ட் கார்டில் சர்ப்ரைஸ்!
Image Credit: Bigg Boss Julie | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழ் உட்பட 5 மொழிகளில் ‘ச ரே கா மா பா’.. Zee அறிமுகப்படுத்தும் புதிய நிகழ்ச்சிகள்!

தமிழ் உட்பட 5 மொழிகளில் ‘ச ரே கா மா பா’.. Zee அறிமுகப்படுத்தும் புதிய நிகழ்ச்சிகள்!

2

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் களமிறங்கும் ஜூலி..வைல்ட் கார்டில் சர்ப்ரைஸ்!

3

Explained : இனிமே போராட்டம் பண்ணக்கூடாது! சிறுவர்கள் போராடினாலும் பெற்றோருக்கு தண்டனை..

4

CJP-க்கு அண்ணாமலை ஆதரவு: "டெல்லி போலீஸ் அணுகுமுறை தப்பு.. சிறை அவர்களை தலைவர்களாக்கும்!"

5

வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! அக்.24 வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

அம்மாவாக போகும் ஜூலி, சக அம்மாவாகப் போகும் சமந்தா ரூத் பிரபுவுடன் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்குகின்றார்.

‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராக நுழைகின்றார். தன்னுடைய உற்சாகமான குணத்தால் அறியப்படும் ஜூலி, இப்போது முற்றிலும் புதிய அனுபவத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். கடினமான சமையல் சவால்கள், குறைந்த நேரத்தில் உணவுகளைத் தயாரிப்பது எனத் தனது சமையல் திறமையை நிரூபிக்க அவர் களமிறங்குகிறார்.

ஜூலியின் வருகையை இன்னும் சிறப்பாக்கும் விஷயம் ஒன்று இருக்கின்றது. ஜூலி தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், நிகழ்ச்சியின் நடுவரான சமந்தா ரூத் பிரபுவும் தாய்மையை எதிர்கொள்ளும் இந்தப் புதிய கட்டத்தில் இருக்கிறார்,இருவரும் வாழ்க்கையின் ஒரே மாதிரியான விஷயத்தை கடந்து வருவதால், உணவின் மீதான ஆசைகள், மாறும் சுவைகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சின்ன சின்ன மகிழ்ச்சிகள் என இருவருக்கும் இடையே சுவாரஸ்யமான உரையாடல்கள் உருவாகலாம், ஆனால் ஒருவர் போட்டியாளர் மற்றொருவர் நடுவர் என்பதால் இந்தச் சந்திப்பு எப்படி அமையும் என்பது எதிர்பார்ப்பை கொடுக்கிறது.

இதுகுறித்துப் ஜூலி பேசுகையில், “என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது. சமந்தாவும் இதே அழகான கட்டத்தைக் கடந்து வருகிறார் என்பதை நினைக்கும்போது என்னுடைய உணவு ஆசைகளைப் புரிந்துகொள்ள ஒருவர் இருக்கிறார் என்ற மகிழ்ச்சி வருகிறது. ஆனால், அவர் நடுவர் இருக்கையில் இருப்பதால், எனக்கு எளிதாக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை,நான் இங்கே சமைக்கவும், என்னை நானே சவாலுக்கு உட்படுத்தவும், நடுவர்களை ஆச்சரியப்படுத்தவும் வந்திருக்கிறேன்” என்று கூறினார் ஜூலி.

மேலும் படிக்க | பாரதிராஜா to தேவா..2026ஆல் தமிழ் சினிமா இழந்த 6 திரை பிரபலங்கள்! மீள முடியாத சோகம்..

சமந்தாவுடன் இணைந்து செஃப் வெங்கடேஷ் பட், செஃப் சாஷி  மற்றும் செஃப் ஷ்ரேயா அட்கா ஆகியோர் ஒவ்வொரு உணவையும் மதிப்பீடு செய்ய இருக்கின்றனர்,எனவே போட்டியில் விரைவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தனது சமையல் திறமையை நிரூபிக்க வேண்டிய சவால் ஜூலிக்கு இருக்கிறது.

ஜூலிக்கும் சமந்தாவுக்கும் இடையே அம்மாவாகப் போகும் அன்பான பிணைப்பு உருவாகுமா? அல்லது ஜூலியின் உணவுகளை மதிப்பிடும்போது சமந்தா இன்னும் கடுமையான நடுவராக மாறுவாரா என்பது எதிர்ப்பார்க்கப்படுகிறது.'Celebrity MasterChef Tamil' நிகழ்ச்சியை Sony VIZHA மற்றும் Sony LIV-ல் காணுங்கள்.

மேலும் படிக்க | ‘ஜெயிலர் 2 ஷோ கேன்சல்! ரஜினி படத்தை திரையிட மறுத்த நிர்வாகம்-என்ன பஞ்சாயத்து?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema