ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படம்! இயக்குநர் யார்..? இதோ முழு விவரம்
பிரபல இயக்குநரான ஜேசன் சஞ்சய், ஹீரோவாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இவருடைய மகனான ஜேசன் சஞ்சய், சமீபத்தில் ‘சிக்மா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து, அடுத்த படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
படுதோல்வியை சந்தித்த ‘சிக்மா’ திரைப்படம்:
ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தை முதன்முதலாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம்தான் சிக்மா. இந்த படத்தை லைகா ப்ராெடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், Heist Thriller பாணியில் எடுக்கப்பட்டது. இப்படத்தின் ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் முன்னரே, நிறைய காலம் தாமதானது. இதையடுத்து, ஷூட்டிங் முடிக்கவும் நேரம் எடுத்தது. படத்தின் ஷூட்டிங் முடித்து படத்தின் ரிலீஸிற்கும் தாமதம் ஆனது.
ஒருவழியாக ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸானது. ஆனால், இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படம், சுமார் ரூ.30 கோடி வரை பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் படம் மொத்தம் ரூ.13 கோடியை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஜேசன் சஞ்சயின் அடுத்த படம்!
ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக எடுத்த முதல் படம் தோல்வியுற்றதால் அடுத்து அவர் வேறு பாதையை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது. அதாவது, அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இதை யார் இயக்க போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அட்லீ, தான் எந்த மேடை ஏறினாலும், எங்கு சென்றாலும் ‘என் அண்ணன் என் அண்ணன் தளபதி..அவரால்தான் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்தது’ என்று பெருமையாக பேசி வருகிறார். இதையடுத்து, இவர்தான் ஜேசன் சஞ்சய் நடிக்கும் முதல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்ப்பட்டது. ஆனால் இப்போது வேறு ஒரு நடிகர் இப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் வேறு யாரும் இல்லை, ‘ட்யூட்’ படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் தானாம். இவர்தான், ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க போகிறாராம். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பது யார்?
அட்லீ, ஜேசனின் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு விஜய் செய்த உதவியை, விஜய் மகனுக்கு திரும்ப செய்ய அட்லீ காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இறுதி சடங்குகளில் இளையராஜா ஏன் கலந்து கொள்வதில்லை? அவரே சொன்ன காரணம்!